தொழிற்றுறை![]() ![]() தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன. தொழிற்றுறைகளை வகைப்படுத்தல்தொழில்களை அவற்றின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்
என வகைப்படுத்தலாம். முதன்மைத் தொழில்முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம். இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம்.
இரண்டாம்நிலை தொழில்மனிதர்கள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர். இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர். மூன்றாம் நிலைத் தொழில்இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும். தொழில்நுட்பத்தில் சிறப்பு மிக்க தொழில்நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர். இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர். நான்காம் நிலைத் தொழில்தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள். ஐந்தாம் நிலைத்தொழில்ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர்.
வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். வரலாறுதொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கு நிலக்கரி பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும். சமூகம்ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, தொழில்துறை மாசடைதல், நிதி மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். தொழில்துறைத் தொழிலாளர்ஒரு தொழில்துறை சமுதாயத்தில், தொழிற்துறைத் தொழிலாளர்கள் முழு அங்கத்தவர்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இது உற்பத்தி துறையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் சங்கம் என்பது சம்பளம், வேலைசெய்யும் மணிநேரம், மற்றும் வேலை நிலைமைகள் போன்ற முக்கிய பகுதிகளில் பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அமைப்பாகும். ஊதிய உழைப்புஊதிய உழைப்பு (அமெரிக்க ஆங்கிலத்தில் wage labor) ஒரு தொழிலாளி மற்றும் ஒரு முதலாளிக்கு இடையேயான சமூக பொருளாதார உறவு ஆகும், அங்கு தொழிலாளி தனது உழைப்பு சக்தியை முறையான அல்லது முறைசாரா வேலை ஒப்பந்தத்தில் விற்கிறார். [1] இந்த பரிவர்த்தனைகள் பொதுவாக தொழிலாளர் சந்தையில் நிகழும் ஊதியங்கள் சந்தை தீர்மானிக்கப்படுகின்றன. [2] செலுத்தப்பட்ட ஊதியங்களுக்கு ஈடாக, வேலை தயாரிப்பு பொதுவாக அமெரிக்காவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளைத் தவிர்த்து, கண்டுபிடிப்பிற்காக தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக பொறுப்பேற்கப்பட்ட காப்புரிமை உரிமைகள் வழக்கமாக வழங்கப்படும். ஒரு கூலித் தொழிலாளி என்பது ஒரு நபர், இதன் மூலம் அவரது உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் வருமானம் முதன்மையானதாக இருக்கிறது. வகைகள்சம்பள உழைப்பின் மிகவும் பொதுவான வடிவம் தற்பொழுது நேரடி அல்லது முழுநேரமாக வேலை (உழைப்பு) உள்ளது.இது ஒரு வேலையாள் தனது வேலைக்கு ஒரு காலவரையற்ற காலம் (ஒரு சில ஆண்டுகளில் இருந்து தொழிலாளி முழு வாழ்க்கை வரை),பணம் சம்பளம் அல்லது சம்பளத்திற்காகவும், பொதுவாக ஒப்பந்த தொழில்லாளர்கள் அல்லது பிற ஒழுங்கற்ற பணியாளர்களிடமிருந்தும் பணியமர்த்தியுடனான தொடர்ச்சியான உறவுக்கு பதிலாக விற்கும் வேலை அல்லது உழைப்பு.இருப்பினும், ஊதிய உழைப்பு பல வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது, மற்றும் வெளிப்படையான (அதாவது உள்ளூர் தொழிலாளர் மற்றும் வரிச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும்) போன்ற வெளிப்படையான ஒப்பந்தங்கள் அசாதாரணமானது அல்ல. பொருளாதார வரலாறு பல்வேறு வகையான வழிகளைக் காட்டுகிறது, இதில் தொழிலாளர் வர்த்தகம் மற்றும் பரிமாற்றம் செய்யப்படுகிறது வேறுபாடுகள் பின்வரும் வடிவத்தில் காண்பிக்கப்படுகின்றன:
விமர்சனங்கள்பல பொதுவுடைமைக்கார்கள் பார்வையில் கூலி தொழிலாளி வர்க்கத்தின் ஒரு அம்சமாக வரையறுக்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தொழிலாளி சுய நிர்வகிப்பு மற்றும் பொருளாதார ஜனநாயகம் இருவரும் ஊதிய உழைப்புக்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றுகளாக ஆதரிக்கின்றனர்.ஊதிய உழைப்பின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் உற்பத்தியின் முதலாளித்துவ உரிமையாளர்களை அதன் இருப்புக்காக குற்றம்சாட்டியுள்ள நிலையில், பெரும்பாலான அராஜகவாதிகள் மற்றும் பிற சுதந்திரவாத பொதுவுடைமைக்கார்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கருவியாக இருப்பதுடன், முதலாளித்துவவாதிகள் தங்களை மானியப்படுத்தி, உற்பத்தி முறையின் தனியார்மயமாக்கலின் தனியார் உடைமை நிறுவனத்தை பாதுகாக்கின்றன.இது ஒரு செல்வந்த உயரடுக்கின் மூலதனத்தை செறிவூட்ட அனுமதிக்காது. கூலி தொழிலாளர்கள் சில எதிர்ப்பாளர்கள் மார்க்சிச முன்மொழிவுகளிலிருந்து செல்வாக்கு செலுத்துகையில், பலர் தனியார் சொத்து எதிர்க்கிறார்கள், ஆனால் [[தனிப்பட்ட சொத்துக்களுக்கு] மரியாதை காட்ட வேண்டியுள்ளது. அதேபோல், வேதியியல் பொருளாதாரம் இல் உள்ள பல அறிஞர்கள், ஊதிய உழைப்பு மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு பணம் செலுத்துகின்றனர், பெரும்பாலான பெண்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், விரிவான ஆய்வுகள் காட்டியுள்ளன.[3] [4]இந்தத் துறையில் உள்ள அறிஞர்கள், செலுத்தப்படாத பெண்களின் வேலைகள் பொருளாதார மதிப்பின் உற்பத்தியையும், சமூக இருப்புக்கான இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் வாதிடுகின்றன.[5] [6] உலகில் தொழில்துறையின் பரம்பல்தொழில்மயமழிதல்வரலாற்றில், வெவ்வேறு பொருளியல் காரணிகளினால், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் குறைந்தோ அல்லது அழிவடைந்தோ போய்விடுகின்றன. ஈடுசெய்யும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதனாலோ, அல்லது மேம்பாட்டில் ஏற்படும் போட்டியில் தோற்றுப் போவதனாலோ இது நிகழக்கூடும். eடுத்துக் காட்டாக தானுந்துkஅள் அதிகளவில் உற்பத்தியாகத் தொடங்கியது, குதிரை வண்டிகளின் உற்பத்தி குறைந்து போனது. தொழில்துறை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia