தோமசு தங்கத்துரை வில்லியம்
மரு. தோமசு தங்கத்துரை வில்லியம் (Dr Thomas Thangathurai William, பிறப்பு: 13 பெப்ரவரி 1944) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்[1] ஆவார். அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பைச் சேர்ந்த தோமசு தங்கத்துரை சமூக சேவையாளர் ஆவார்.[2] இவர் இலங்கையின் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு 9,029 விருப்பு வாக்குகள் பெற்று ததேகூ வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3] ஆனாலும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதன் 2009 மே மாதத்தில் இறந்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு கட்சிப் பட்டியலில் இருந்து (இரண்டாவதாக வந்த அரியநாயகம் சந்திரநேரு ஏற்கனெவே இறந்தததினால்) தோமசு வில்லியம் 2009 சூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.[4] 2010 தேர்தலில் இவர் போட்டியிட்டாராயினும், 8,256 விருப்பு வாக்குகள் பெற்று கூட்டமைப்பு வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia