நக்மா
நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்[1]. இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவார். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவார்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவர் ஆவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[3] தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. அரசியல் அவதாரம்2014 ஆம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.[4] நடித்துள்ள திரைப்படங்கள்நடித்துள்ள தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[5]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia