நஞ்சனாபுரம்
நஞ்சனாபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 239 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நஞ்சனாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′52″N 77°39′37″E / 11.314500°N 77.660200°E (அதாவது, 11°18'52.2"N, 77°39'36.7"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை நஞ்சனாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சனாபுரத்தில் அமையப் பெற்றுள்ளது.[3] நஞ்சனாபுரம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[4] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia