நந்தவன தேரு
நந்தவன தேரு 1995 இல் வெளிவந்த 1995 தமிழ்த் திரைப்படமாகும். இதனை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இப்படத்தில் கார்த்திக் மற்றும் அறிமுக நாயகி ஸ்ரீநிதி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். டி. சிவா மற்றும் ஏ. செல்வராஜ் ஆகியோர் இதனைத் தயாரித்திருந்தனர். இசை இளையராஜா 1995 மே 11 அன்று இப்படம் வெளி வந்தது. இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை [1][2][3][4] கதைசீனு (கார்த்திக்) அவன் ஒரு அனாதை மற்றும் ஒரு முழுநேர திருடன் . சிறைக்கு வெளியே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவன் சிறைக் கைதிகளுக்கு உதவுகிறான். ஒரு நாள், கைதி ஒருவன் சோகமாக இருக்கிறான். சீனு அவனது பிரச்சனையைப் பற்றி அவனிடம் கேட்கிறான். காயத்ரி (ஸ்ரீநிதி) என்ற ஒரு பாடகியின் தாய்வழி மாமா ஆதிசேஷன் (தேவன்) அவர் பெரிய செல்வந்தர், காயத்ரியின் மாமா ராஜசேகரன் (ஆனந்த் ராஜ்) மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகியோரால் ஆதிசேஷன் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். ஆதிசேஷனுக்கு எதிராக காயத்ரியின் மனதில் விஷத்தை தூவுகிறார்கள். காயத்ரி வாழ்க்கை பெரும் அபாயகரமானதாக இருப்பதாக ஆதிசேஷன் நம்புகிறார், இதற்காக, சீனுவை காயத்திரியை காப்பாற்றக் கோருகிறார். சீனு அவரது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக வாக்களிக்கிறான். ஆரம்பத்தில், காயத்ரி சீனுவைத் தவிர்க்கிறார், ஆனால் விரைவில் ராஜசேகரின் உண்மையான முகத்தை அவள் புரிந்துகொள்கிறாள், அவள் சீனுவின் நண்பராகிறாள். பின்னர் காயத்திரியின் வாழ்க்கையில் என்னவாயிற்று?. ஆதிசேஷன் சிறையிலிருந்து மீண்டாரா? ராஜசேகரன் மற்றும் அவரது மகன் குணசேகரன் ஆகிய இருவரும் தண்டிக்கப்படனரா? என்பது படத்தின் மீதிக்கதைச் சொல்கிறது. நடிகர்கள்
ஒலித்தொகுப்பு
இசையமைப்பாளர் இளையராஜா இசைமைத்திருந்தார். 8 பாடல்கள் கொண்ட படத்தின் பாடல்கள் 1995 இல் வெளி வந்தது, ஆர். வி. உதயகுமார் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia