நல்ல இடத்து சம்மந்தம்
நல்ல இடத்து சம்மந்தம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] தயாரிப்புஇதுவே ஏ. பி. நாகராஜன் தயாரித்த முதல் திரைப்படமாகும். அவரும் வி. கே. ராமசாமியும் இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். வி. கே. ராமசாமி கதை எழுத, ஏ. பி. நாகராஜன் வசனங்கள் எழுதினார்.[2] எல். ஆர். ஈஸ்வரி பின்னணி பாடகியாக அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான். இதற்கு முன் வடிவுக்கு வளைகாப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹம்மிங் மட்டும் கொடுத்திருந்தார். அதுவரை இவரது பெயர் டி. எல். ராஜேஸ்வரி (டேவிட் லூர்துமேரி ராஜேஸ்வரி) என்றே அறியப்பட்டது. அக்காலத்தில் இன்னொரு ராஜேஸ்வரி (எம். எஸ். ராஜேஸ்வரி) பிரபலமாக இருந்ததால் ஏ. பி. நாகராஜன் இவரது பெயரை எல். ஆர். ஈஸ்வரி என மாற்றி வைத்தார்.[3] பாடல்கள்திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, அ. ச. நாராயணன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பின்னணி பாடியவர்கள் சூலமங்கலம் ராஜேஸ்வரி, எல். ஆர். ஈஸ்வரி, கஸ்தூரி, கஜலட்சுமி, உடுத்தா ஆகியோர்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia