மேல்நாட்டு மருமகள்
மேல் நாட்டு மருமகள் (Melnaattu Marumagal) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் அமெரிக்க அம்மாயி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. நடிகர்கள்
தயாரிப்புஜூனியர் பாலையா இத்திரைப்படம் மூலம் திரைப்பட துறையில் அறிமுகமானார்.[2] பாடகர் உஷா உதூப் தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலுக்கு திரையிலும் நடித்துள்ளார்.[3] நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்த ஒரே படமாகும், பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பாடல்கள்குன்னக்குடி வைத்தியநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4] 'பூவை செங்குட்டுவன்', 'உளுந்தூர்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி', 'திருச்சி பரதன்', கீதா பிரியன் மற்றும் குயில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.[5][6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia