நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018
நாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018 (Nagaland Legislative Assembly election, 2018) 27 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்றது. இம்மாநிலச் சட்டப் பேரவையின் 60 உறுப்பினர்களுக்கான தேர்தலில், வடக்கு அங்காமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நைபியு ரியோ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால், 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது.[2][3] வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்று நடைபெற்றது. பின்னணிநாகாலாந்து சட்டமன்றத்தின் பதவிக்காலம் 13 மார்ச் 2018 அன்றுடன் முடிய உள்ளததால் இத்தேர்தல் நடைபெறுகிறது. [4] 22 சனவரி 2018ல் நாகாலாந்து முன்னாள் முதலமைச்சர் கே. எல். சிசி 12 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5] 11 அரசியல் கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி அறிக்கை வெளியிட்டன.[6] தேர்தலுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, நாகலாந்தை ஆளும் நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டது. அதற்கு பதிலாக நைபியு ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைத்துக் கொண்டது.[7][8] தேர்தல் முடிவுகள்3 மார்ச் 2018 அன்று வாக்குகள் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் எந்த கூட்டணியும் அறுதிப் பெரும்பான்மை இடங்களை பெற இயலவில்லை.[9][10][11] தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சியின் வேட்பாளர் நைபியு ரியோ வடக்கு அங்காமி II தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [12]
ஆட்சி அமைத்தல்பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நைபியு ரியோ தலைமையில் நாகாலாந்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தையும், தங்களுக்கு ஆதரவாக உள்ள 32 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுநர் பி.பி. ஆச்சார்யாவிடம் ஒப்படைத்தார். [13] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia