நாகாலாந்து சட்டமன்றம்
நாகாலாந்தின் சட்டமன்றம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் சட்டவாக்க அவையாகும். நாகாலாந்தில் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையதால், சட்ட மேலவை கிடையாது. சட்டமன்றம் மட்டுமே செயல்படும். இந்த சட்டமன்றம் 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெறுபவர், அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகிறார்.[5] இந்த மன்றத்தில் யாரும் நியமிக்கப்படுவதில்லை. (பாராளுமன்றத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் குடியரசுத் தலைவராலும், ஆளுநராலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுண்டு.) ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். அரசின் தலைமைச் செயலகம் கோகிமாவில் உள்ளது. சட்டமன்றக் கட்டிடமும் கோகிமாவில் உள்ளது. இந்த சட்டமன்றத்தின் தற்போதைய சபாநாயாகராக கியனிலி பெசியீ என்பவர் பதவி வகிக்கிறார்.[6] சான்றுகள்
மேலும் படிக்க
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia