நாரி சக்தி விருது
நாரி சக்தி விருது (Nari Shakti Puraskar) ("பெண் சக்தி விருது") என்பது இந்திய அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் விருதாகும்.[1] இந்த விருதுகளை அனைத்துலக பெண்கள் நாள் அன்று (மார்ச் 8) புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1999இல் ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் என்ற தலைப்பில் நிறுவப்பட்டு 2015ஆம் ஆண்டில் மறுபெயரிடப்பட்டு மறுசீரமைக்கப்பட்டன. ஆறு நிறுவனப் பிரிவுகளிலும் இரண்டு தனிப்பட்ட பிரிவுகளிலும் விருதுகள் கொடுக்கப்படுகின்றன. இவை முறையே இரண்டு இலட்சம் மற்றும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளன.[2] வகைகள்![]() நாரி சக்தி விருதுகள் ஆறு நிறுவனப் பிரிவுகளிலும், தனிப்பட்ட பெண்களுக்கு இரண்டு பிரிவுகளிலும் வழங்கப்படுகிறது. [1] நிறுவனப் பிரிவுகள்ஆறு நிறுவன வகைகளில் ஒவ்வொன்றுக்கும் இந்திய வரலாற்றில் இடம்பெற்ற ஒரு சிறந்த பெண்ணின் பெயரிடப்பட்டது.[1]
தனிப்பட்ட பிரிவுகள்
வரலாறுநாரி சக்தி விருகளுக்கான முன்னோடி ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் 1999இல் நிறுவப்பட்டது. இது ₹ 100,000 மற்றும் ஒரு சான்றுடன் வழங்கப்பட்டது. நாரி சக்தி விருது போன்ற அதே ஆறு பிரிவுகளில் ஸ்த்ரீ சக்தி புரஸ்காரும் வழங்கப்பட்டது.[5] [6] 2021 விருது பெற்றோர்2021 விருது வழங்கும் விழா 2022ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வெற்றியாளர்கள் நரேந்திர மோடியை சந்தித்தனர்[7]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia