நா. இராமகிருஷ்ணன்நா. இராமகிருஷ்ணன் (N. Eramakrishnan)(பிறப்பு: ஜூலை 30, 1949) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கம்பம் தொகுதியைச் சேர்ந்த தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தினை (திமுக) பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இதற்கு முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) இருந்துள்ளார். நா. இராமகிருஷ்ணன் ஜூலை 1949 30 அன்று கம்பத்தில் பிறந்தார். முதுகலைப் பட்டதாரியான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] இராமகிருஷ்ணன் முதன்முதலில் தமிழக சட்டப்பேரவைக்குக் கம்பத்திலிருந்து 1989ஆம் ஆண்டு திமுக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு மதிமுக வேட்பாளராக வெற்றிபெற்றார். திமுகவுக்குத் திரும்பி, 2009 ல் நடந்த இடைத் தேர்தலில் மீண்டும் இந்தத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதைத் தொடர்ந்து 2011 மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். ஆனால் 2016இல் அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே ஜக்கையனிடம் தோல்வியுற்றார்.[2] பின்னர் அண்மையில் 2021 நடைபெற்ற மாநிலத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஏப்ரல் 2012இல் சட்டமன்ற சபாநாயகர், து. ஜெயக்குமாரால் பத்துநாட்கள் சவை இடை நீக்கம் செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரில் இவரும் ஒருவர்.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia