நிகில் குமார் (நடிகர்)![]() நிகில் குமாரசாமி (Nikhil Kumarswamy) இவர் ஓர் இந்திய நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமாவார்.[1] இவர் கன்னட மற்றும் தெலுங்குத் திரையுலகில் நடித்துள்ளார். கன்னட-தெலுங்கு இருமொழி திரைப்படமான ஜாகுவார் (2016) மூலம் நடிகராக அறிமுகமானார்.[2] தனிப்பட்ட வாழ்க்கைநிகில் குமாரசாமி முன்னாள் கர்நாடக முதல்வர் எச். டி. குமாரசாமியின் மகனும் முன்னாள் இந்தியப் பிரதமர் எச். டி. தேவ கௌடாவின் பேரனும் ஆவார்.[1][2] 2020 பிப்ரவரி 10, பெங்களூரின் தாஜ் வெஸ்ட் எண்டில் காங்கிரசு தலைவரும் ரியல் எஸ்டேட்டருமான எம். கிருஷ்ணப்பாவின் பேத்தியான ரேவதியுடன் நிகில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[3][4] திருமணம் 2020 ஏப்ரல் 17, அன்று ராம்நகரில் உள்ள ஜனபட லோகாவில் நடைபெற்றது.[5][6] அரசியல் வாழ்க்கை2019ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் கர்நாடகாவில் ( மக்களவை ) மண்டியா மாவட்டத்தில் இருந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) வேட்பாளராக நிகில் போட்டியிட்டார் [7] . வரலாற்று ரீதியாக இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வெற்றிகரமான கட்சியாக இருந்ததால், காங்கிரசு- ஜனதா தளம் (மதசார்பற்றது) கூட்டணிக்கு மண்டியா ஒரு பாதுகாப்பான கோட்டையாக கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனதா தளம் (மதச்சார்பற்றது) மண்டியா மாவட்டத்தில் போட்டியிட்டது.[8][9][10] தேர்தலில் அவர் மறைந்த அம்ரீசின் மனைவி சுமலதாவிடம் 128,876 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia