நிமலன் சௌந்தரநாயகம்
ஆசுலி நிமலன் சௌந்தரநாயகம் (Ashley Nimalan Soundaranayagam, 6 நவம்பர் 1950 - 7 நவம்பர் 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சௌந்தரநாயகம் பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.[1][2] சௌந்தரநாயகம் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.[3][4] மீண்டும் இவர் 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5] படுகொலைசௌந்தரநாயகம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் 2000 நவம்பர் 7 இல் கிரான் என்ற ஊரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2][6] இவரது கொலைக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தலைவரும் இலங்கை அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனே காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia