விநாயகமூர்த்தி முரளிதரன்

விநாயகமூர்த்தி முரளிதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
7 அக்டோபர் 2008 – 26 சூன் 2015
முன்னையவர்வசந்த சமரசிங்க
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 22, 1966 (1966-06-22) (அகவை 58)
கிரான், மட்டக்களப்பு மாவட்டம்
தேசியம்இலங்கைத் தமிழ்
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (2004–2009)
துணைவர்நிரா
பிள்ளைகள்3
புனைப்பெயர்கருணா அம்மான்
இராணுவ சேவை
பற்றிணைப்புதமிழீழ விடுதலைப் புலிகள்
இலங்கை அரசு
சேவை ஆண்டுகள்1983-2004,
2004-2009
அலகுகருணா குழு
கட்டளைதலைவர், கருணா குழு,
விடுதலைப் புலிகளின் தளபதி, கிழக்கு மாகாணம்

விநாயகமூர்த்தி முரளிதரன் (பிறப்பு: 22 சூன் 1966, பிரபலமாக கேணல் கருணா அம்மான் என்றும் அறியப்படுகிறார்) முன்னாள் போராளியும், இலங்கை துணை-இராணுவக்குழு முன்னாள் உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஆவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய முரளிதரன், மார்ச் 2004 இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டார். இலங்கை அரசின் ஆதரவாளராக செயல்படத் தொடங்கினார்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் அரசியலில் நுழைந்த முரளிதரன் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் மூலம் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.[1] அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.[2] மார்ச் 9 2009 ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டார்.

இவர் 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னதாக இவர் 2008 அக்டோபர் 7 முதல் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

ஈழப்போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகக் கருதப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய இராச்சியம் 2025 மார்ச் 24 அன்று பிரித்தானியாவுக்கான பயணத் தடைகள், சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட தடைகளை அறிவித்தது.[3]

வாழ்க்கை வரலாறு

கிழக்கிலங்கை மட்டக்களப்பு கிரானில் பிறந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1983 ஆண்டில் இணைந்து கொண்டார். 2003 ஆம் ஆண்டில் இவர் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவராகிய வே. பிரபாகரனால் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை விசேட கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கிலங்கைப் போராளிகளுக்கு அவர்களது அமைப்பில் தகுந்த மதிப்பு, வாய்ப்புக்கள் தரப்படவில்லை என்றும், கிழக்குப் போராளிகள் பயன்படுத்தப்பட்டு வீணாக பலியிடப்பட்டனர் என்றும் புலிகளின் "வடக்கு மைய தலைமையை" குற்றம்சாட்டி கேணல் கருணா தலைமையில் புலிகளின் பல கிழக்குப் போராளிகளும் தலைவர்களும் ஏப்ரல் 2004 பிளவுபட்டார்கள்.[4]. கேணல் கருணா புரிந்துணர்வு ஒப்பந்தம் தம்முடனும் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். விடுதலைப் புலிகளோ ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவு அரசியல் இராணுவ ரீதியில் புலிகளுக்கு பின்னடைவையும், ஒரு புதிய எதிர்ப்பு சக்தியையும் தோற்றுவித்தது.

இவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு ரீதியில் செயல்பட்டனர்.

மனித உரிமை மீறல்கள்

கருணா குழுவினர் மட்டக்களப்பில் சிறுவர்களைப் பெரும்பாலும் பதின்ம வயதினரை வலுக்கட்டாயமாகப் படையில் சேர்ப்பது அவதானிக்கப்பட்டது. இவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவதால் இலங்கை இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைக்கு ஆதரவளித்து வந்தனர்.[சான்று தேவை]

லண்டனில் கைது

கருணா அணியிலிருந்து பிரிந்து சென்ற பிள்ளையான் அணியினர் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் அலுவலகங்களைக் கைப்பற்றியதை[5] அடுத்து, இலங்கை அரசினால் போலிக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு இரகசியமாக லண்டனுக்கு சென்ற கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக அங்கு காவற்துறையினரால் நவம்பர் 2, 2007 இல் கைது செய்யப்பட்டார்.[6]

இலங்கையில் மீண்டும் கருணா

வேறு பெயரிலான ஒரு கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் நுழைந்த வழக்கில் கருணாவுக்கு ஒன்பது மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னர் கருணா குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார்.[7][8]

பிரித்தானியாவின் தடை

ஈழப்போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக கருதப்பட்ட இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூரியா, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நால்வருக்கும் ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது. பிரித்தானியாவுக்கான பயணத் தடைகள், சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்களுக்குப் பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன என்று இங்கிலாந்தின் வெளியுறவு, பொதுநலவாய, மேம்பாட்டு அலுவலகம் 2025 மார்ச் 24 அன்று தனது அறிக்கையில் தெரிவித்தது.[3][9] பிரித்தானிய அரசு தெரிவித்த தடைக்கான காரணங்கள்:

மேற்கோள்கள்

  1. இலங்கை ஆளுங்கட்சியின் நியமன எம்.பி.யாக கருணா நியமனம், OneIndia, 7 October 2008
  2. Karuna joins Cabinet பரணிடப்பட்டது 2012-05-23 at the வந்தவழி இயந்திரம் த இந்து - March 10, 2009
  3. 3.0 3.1 UK sanctions Shavendra Silva, Wasantha Karannagoda, Jagath Jayasuriya and Karuna Amman, அத தெரண, 24 மார்ச் 2025
  4. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3550071.stm 5,000 rally for breakaway Tiger
  5. http://www.dailymirror.lk/2007/11/07/news/10.asp
  6. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7076248.stm
  7. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார் கருணா (பிபிசி செய்திகள்)
  8. சிறிலங்காவில் மீண்டும் கருணா (புதினம்)
  9. UK sanctions for human rights violations and abuses during the Sri Lankan civil war, Press Release, Gov.uk, 24 March 2025
  10. "சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்யுமாறு உத்தரவிட்டவர் சவேந்திர டி சில்வா ; தடைகளிற்கான காரணங்கள் குறித்த ஆவணத்தில் பிரிட்டன் தெரிவிப்பு". வீரகேசரி. 25 மார்ச்சு 2025. Archived from the original on 25 மார்ச்சு 2025. Retrieved 25 மார்ச்சு 2025. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya