நிமிர்
நிமிர் (Nimir) பிரியதர்சன் இயக்கத்தில், சந்தோஷ், டி. கருவில்லா ஆகியோரின் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், மகேந்திரன்,பார்வதி நாயர் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த் திரைப்படம். தர்புகா சிவா, அஜனேஷ் லோக்நாத் ஆகியோரின் பாடலிசையிலும், ரோனி ரபேலின் பின்னணி இசையிலும் , என். கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவிலும், ஐயப்பன் நாயரின் படத்தொகுப்பிலும் 2018இல் திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மகேஷிண்டே பிரதிகாரம் என்னும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல் கதையையொட்டி தமிழில் உருவாக்கப்பட்டது ஆகும் [1][2] நடிப்பு
கதைஒரு சண்டையில் செல்வத்தை (உதயநிதி) அடித்து விடுகிறார் வெள்ளையப்பன் (சமுத்திரக்கனி). வெள்ளையப்பனை திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார் செல்வம். தன்னை அடித்து அவமானப்படுத்திய வெள்ளையப்பனை திருப்பி அடிக்காமல் செருப்பு அணிய மாட்டேன் என்று முடிவெடுக்கும் ஒரு ஒளிப்படக் கலைஞனின் சூளுரை என்னவானது என்பதே இத்திரைப்படத்தின் கதை.[4][5] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia