நியூ (திரைப்படம்)
நியூ (New) 2004 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜே. சூர்யா இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இது 1988 ஆவது ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியான பிக் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். சிம்ரன், தேவயானி, கிரண் ராத்தோட் ஆகியோர் இதர முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். நடிகர்கள்
கதைச் சுருக்கம்எட்டு வயது சிறுவன் ஒருவன், விஞ்ஞானி ஒருவரால் 28 வயதுடைய நபராக மாற்றம் பெற்றால் என்ன நடக்கும் என்பது இத்திரைப்படத்தின் கதையாகும். பாடல்கள்
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்பைடர்மேன் எனத் தொடங்கும் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இதர அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் பரவலான வரவேற்பு பெற்றன.[1][2] 2001 ஆவது ஆண்டில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எஸ். ஜே. சூர்யா, இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைப்பதாகக் கூறினார். ஆனால் பின்னர் இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.[3] 1964 ஆவது ஆண்டில் வெளியான படகோட்டி திரைப்படத்தில் இடம்பெற்ற தொட்டால் பூ மலரும் பாடலை இப்படத்தில் மறுஆக்கம் செய்திருந்தார். அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia