தேவயானி (ஆங்கிலம்: Devayani, பிறப்பு: 22 சூன் 1974) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடத் தந்தையான ஜெயதேவுக்கும், மலையாள தாயான இலட்சுமிக்கும் மகளாக பிறந்தார். இளநிலை கணக்குப்பதிவியல் பட்டம் பெற்றவர். இவருடைய இயற்பெயர் சுஷ்மா. திரையுலகிற்காக தன் பெயரை தேவயானி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். ஒரு சில இந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் தொலைக்காட்சியின்கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாண்ஸ்டாப் கூரியரின் "இனிமே இதுதான் இது மட்டும்தான்" எனும் விளம்பரத்திலும் நடித்திருக்கிறார்.
திருமணம் வாழ்க்கை
தேவயானியும், இயக்குநர் ராஜகுமாரனும் காதலித்து வந்தனர். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.