நீர்ப்பறவை
நீர்ப்பறவை என்பது 2012-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில் விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, தம்பி இராமையா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இதை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிசு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் வைரமுத்து. வசனம் ஜெயமோகன், சீனு ராமசாமி. எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்திற்கான வசனங்களை எழுதினார்.[1] முதலில் விமல் நடிப்பதாக இருந்த இப்படத்தில்,[2] விமலால் தேதிகள் ஒதுக்க முடியாததால் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார் என்று பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[3] கதைச்சுருக்கம்நகரத்தில் இருந்து கடலோரக் கிராமத்திற்கு வரும் மகன் தனது அம்மா நந்திதாதாஸிடம் (வயதான சுனைனா), இந்த வீட்டை விற்றுவிட்டு தன்னுடன் நகரத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்கிறான். கடலுக்கு போன அப்பா என்னைத் தேடி வருவாரு அவர் வரும் போது நான் இங்கே இருக்க வேண்டும். அதனால் என்னால் இந்த வீட்டை விற்கமுடியாது என்று சொல்ல, 25 ஆண்டிற்கு முன் கடலில் காணாமல்போன அப்பா இருக்கிறாரோ செத்துட்டாரோ, அவரு வருவாரு வருவாரு என்று சொல்லிட்டு இருக்கியே என்று கோபம் கொள்ள, அந்த வீட்டின் ஓரிடத்தில் கல்லறையில் பாடும் பாடலை பாடி நந்திதாதாஸ் அழுகிறார். இதைப் பார்த்த அந்த மகன் தனது அம்மா இல்லாத நேரத்தில் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க, அந்த இடத்தில் எலும்புக் கூடு ஒன்று இருக்கிறது. அந்த எலும்புக்கூடு அருளப்பசாமியுடையது (விஷ்ணு) என்றும், விஷ்ணுவைக் கொன்றது தான் தான் என்றும் நந்திதாஸ் நீதிமன்றத்தில் கூறுகிறார். அதிலிருந்து பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், தேவாலயத்தில் ஊழியம் செய்யும் கன்னித்துறவியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆன காதலை மீனவப் பின்னணியில் இயக்குநர் சீனு ராமசாமி சொல்லியிருக்கிறார். இளைஞன் அருளப்பசாமி (விசுணு) குடிகாரனாக இருக்கிறான். அவன் தந்தை லூர்தும் (பூ ராம்) தாய் மேரியும் (சரண்யா பொன்வண்ணன்) அவனைத் திருத்த முயல்கிறார்கள், அதில் வெற்றி கிடைக்கவில்லை. தேவாலயத் தந்தை உதவியுடன் மகனை, குடிகாரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்திக் கொண்டு வருகின்றனர். ஆனால் பாதியில் ஓடி வந்துவிடுகிறான் அருளப்பசாமி. அன்று திருவிழா. போதையில் வரும் அருளப்பசாமி, தேவாலய வாசலில் படுத்திருக்கும் எஸ்தரின் (சுனைனா) பக்கத்தில் நிலை மறந்து படுத்துவிடுகிறான். இதைக்கண்ட ஊர் மக்களும் அவன் தந்தையும் அவனை அடிக்கிறார்கள், குடியை மறக்க விரும்பி அருளப்பசாமி தானே மறுவாழ்வு மையத்திற்குப் போகிறான். அங்கு திருந்தி தான் சொந்தமாக மீன் பிடிக்க வேண்டும் என்று முயலுகையில் அவன் மீனவன் அல்ல (அவனை பெற்ற தாயும் தந்தையும் படகில் குண்டடிபட்டு இறந்து விடுகின்றனர். அவனைக் கண்டெடுத்த லூர்தும் மேரியும் அவனைத் தங்கள் பிள்ளை போல் வளர்க்கிறார்கள்) என்பதால் அவன் மீன் பிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு வருகிறது. அவர்களின் தடைகளை மீறி சொந்தமாகப் படகு வாங்கும் அருளப்பசாமி சின்ன எதிர்ப்புக்கிடையில் சுனைனாவைத் திருமணம் செய்து வாழ்க்கையில் சிறிது நிலைபெறும் போது சிங்களக் கடற்படையால் சுடப்படுகிறான். நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia