நுஸ்கி மாவட்டம்
நுஸ்கி மாவட்டம் அல்லது நோஸ்கி மாவட்டம் (Nushki District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் வடமேற்கில் பாகிஸ்தான்-ஆப்கானித்தான் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நுஸ்கி நகரம் ஆகும். அமைவிடம்கடல்மட்டத்திலிருந்து 2900 அடி உயரத்தில் அமைந்த நூஸ்கி மாவட்டம், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளது. நுஷ்கியிலிருந்து நகரத்திலிருந்து, தட்டையான பலூசிஸ்தான் பாலைவனம் வடக்கு மற்றும் மேற்கு நோக்கி ஹெல்மண்ட் ஆறு வரை நீண்டுள்ளது. [3] மக்கள் தொகை பரம்பல்2023 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நுஷ்கி மாவட்டம் 31,255 குடியிருப்புகளும், 2,07,834 மக்கள் தொகையும் கொண்டது. பாலின விகிதம் . 100 பெண்களுக்கு 108.75 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.12% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 69.24% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 44.16% ஆக உள்ளது.[4][5]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்ட குழந்தைகள் 73,251 (35.35%) ஆக உள்ளனர்.[6]நகர்புறங்களில் 48,572 (23.37%) மக்கள் வாழ்கின்றனர்.[4] சமயம்இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 99.13%, இந்து சமயத்தினர் 0.69% மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[1] மொழிகள்இம்மாவட்டத்தில் பிராகுயி மொழி 56.87%, பலூச்சி மொழி 38.46%, பஷ்தூ மொழி 4.34 மற்றும் பிற மொழிகளை 0.33% மக்கள் பேசுகின்றனர். பிராய்கி மொழி மாவட்ட நிர்வாகம்நுஷ்கி மாவட்ட ஒரே ஒரு வருவாய் வட்டம், கொண்டுள்ளது. மேலும் 8 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது. பலுசிஸ்தான் விடுதலைப்படையின் தாகுதல்கள்நோஸ்கி மாவட்டம் வழியாக 8 பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் துணை இராணுவ வீரர்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 90 வீரர்கள் கொல்லப்படனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.[7][8][9] மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia