நெகிரி செம்பிலான் இராஜா மெலேவார்
இராஜா மெலேவார் அல்லது நெகிரி செம்பிலான் இராஜா மெலேவார் ஆங்கிலம்: Melewar of Negeri Sembilan; மலாய்: Raja Melewar Negeri Sembilan) என்பவர் மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முதல் யாம் துவான் பெசார்; மேலும் இந்தோனேசியா சுமாத்ரா, பகாருயோங் இராச்சியத்தின் இளவரசரும் ஆவார்.[1][2] யாம் துவான் பெசார் என்பவர் மலேசியாவின் மற்ற மாநிலங்களின் அரசத் தலைவரான சுல்தான் என்பவருக்குச் சமமானவர். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும் சுல்தான் என்பவர் யாம் துவான் பெசார் என்று அழைக்கப்படுகின்றார். பொதுவரலாறு![]() ![]() ![]() மினாங்கபாவு மக்கள் மலாக்கா சுல்தானகத்தின் வடக்கே உள்ள பகுதியில் குடியேறிய முதல் புலம்பெயர்ந்த சமூகத்தினவர் ஆவார்கள். இந்தப் புலம்பெயர்வு 15-ஆம் நூற்றாண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு மினாங்கபாவு சமூகக் கூட்டமைப்பை உருவாக்கியது. 1511-இல் போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஆக்கிரமித்தனர். அதன் பிறகு, அந்தச் சமூகக் கூட்டமைப்பு ஜொகூர் சுல்தானகத்தின் பாதுகாப்பிற்குள் வந்தது. அதன் தொடர்ச்சியாக மினாங்கபாவு மக்கள் உள்ளூர் அரசியலைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தொடங்கினர். 1760-ஆம் ஆண்டில், ஜொகூர் சுல்தானகம் டச்சுக்காரர்களிடமிருந்து பல்வேறான அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டது. அதனால் நெகிரி செம்பிலானில் இருந்த மினாங்கபாவு மக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க இயலவில்லை. மினாங்கபாவு மக்கள், தாங்களே சொந்தமாக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஜொகூர் சுல்தானகம்அந்த வகையில் சுமத்திராவில் உள்ள பகாருயோங் இராச்சியத்தில் இருந்து ஓர் ஆட்சியாளரை வரவழைத்து, அவரைத் தலைவராக நியமித்துக் கொள்ள ஜொகூர் சுல்தானகம் அனுமதி வழங்கியது. 1760 மற்றும் 1770-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இன்றைய நெகிரி செம்பிலான் உண்டாங்குகளின் முன்னோடியாக விளங்கும் டத்தோ பெங்குலு லுவாக் (Datuk Penghulu Luak) தலைவர்களின் குழு ஒரு தலைவரைத் தேடி சுமத்திராவில் உள்ள பகாருயோங் இராச்சியத்திற்கு புறப்பட்டது. அப்போதைய பகாருயோங் இராச்சியத்தின் யாம் துவான் பெசார், அந்த உண்டாங் தலைவர்களிடம் தன் மகன் இராஜா மகமூத் என்பவரை அவர்களின் தலைவராக அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார்.[3] இராஜா காதிப்இராஜா மகமூத் மலாக்காவிற்குச செல்வதற்கு முன்னர், இராஜா மகமூத்தின் முடிசூட்டு விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட, இராஜா காதிப் (Raja Khatib) என்ற அரச குடும்பத்தினர் ஒருவர் நெகிரி செம்பிலானுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், இராஜா காதிப் நெகிரி செம்பிலானுக்கு வந்தவுடன், பகாருயோங் இராச்சியத்தில் இருந்து அனுப்பப்பட்ட இளவரசன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். உள்ளூர்வாசிகள் அவரை நம்பி அவரைப் புதிய அரசராக ஏற்றுக் கொண்டனர். இதற்கிடையில், நெகிரி செம்பிலானை ஆள்வதற்கு ஜொகூர் சுல்தானின் சம்மதத்தைக் கேட்க இராஜா மகமூத், முதலில் ஜொகூருக்குச் சென்றார். அப்போதைய ஜொகூர் சுல்தான் மகமூத் சா III சம்மதம் தெரிவித்தார். அத்துடன் ஜொகூர் சுல்தான், நெகிரி செம்பிலான் மீது ஆட்சி செய்யும் அதிகாரத்தை இராஜா மகமூத்திற்கு வழங்கினார். அதன் பின்னர் இராஜா மகமூத், நெகிரி செம்பிலான் நானிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றார். இராஜா காதிப் தோல்விநானிங் பகுதியை அடைவதற்கு முன்னர், இராஜா மகமூத்தின் படைகள் பூகிஸ் தலைவர் டேங் கெம்போஜா என்பவரின் படையினரைச் சந்தித்தனர். இரு படைகளுக்கும் இடையே போர் தொடங்கியது. அந்தப் போரில் பூகிஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டன. இராஜா மகமூத் நெகிரி செம்பிலானின் இராஜாவாகக் கருதப்பட்டு, ரெம்பாவ் நகரில் யாம் துவான் பெசார் இராஜா மெலேவார் என முடிசூட்டப்பட்டார். முடிசூட்டு விழா 1773-இல் நடைபெற்றது. இதன் பின்னர் சில நாட்களில், மினாங்கபாவ் மக்களின் ஆட்சியாளராக வருவதற்கான இராஜா காதிப்பின் திட்டத்தை ராஜா மெலேவார் அறிந்தார். இராஜா காதீபுக்கு எதிராக இராஜா மேலவர் போரை அறிவித்தார். இராஜா மேலேவார் போரில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் தன் அரண்மனையை செரி மெனாந்திக்கு மாற்றினார். இந்த அரண்மனை இன்றுவரை நெகிரி செம்பிலானின் அரச அரண்மனையாக உள்ளது. இறப்பு1795-இல், இராஜா மெலேவார் ரெம்பாவ் சென்றிருந்தபோது நோய்வாய்ப்பட்டார். சில நாட்களில் காலமானார். அவர் தன் மனைவி மற்றும் இரண்டு போர்வீரர்களுடன் ரெம்பாவ் அஸ்தானா ராஜாவில் அடக்கம் செய்யப்பட்டார். அவரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரின் மகன் அவர்களின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. டத்தோ பெங்குலு லுவாக் தலைவர்களின் குழு மீண்டும் தங்கள் பூர்வீக நிலத்திற்குப் பயணம் செய்தனர். பகாருயோங்கின் அப்போதைய யாம் துவான், தன்னுடைய மற்றொரு மகனான இராஜா ஈத்தாம் என்பவரை நெகிரி செம்பிலானின் புதிய யாம் துவான் பெசார் பதவிக்கு அனுப்பி வைத்தார். இராஜா ஈத்தாம், பின்னர் காலத்தில் இராஜா மெலேவாரின் மகள் தெங்கு ஆயிசாவை மணந்தார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.[3] மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia