ரெம்பாவ்
ரெம்பாவ் என்பது (மலாய்: Rembau; ஆங்கிலம்: Rembau; சீனம்: 林茂); மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். ரெம்பாவ் எனும் பெயரில் ஒரு மாவட்டமும் உள்ளது. அதன் பெயர் ரெம்பாவ் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகரமும் ரெம்பாவ் நகரம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவிலும்; கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 95 கி.மீ. தொலைவிலும்; ரெம்பாவ் நகரம் அமைந்து உள்ளது. மலேசியக் கூட்டரசு சாலை 1 பெரும்பாலான மக்கள் விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சாலை ஊழியர்கள். தவிர இங்குள்ள மலாய்க்கார இளைஞர்கள் பெரும்பாலோர் இராணுவம் மற்றும் காவல் துறையில் சேர்வது வழக்கமாக உள்ளது. வரலாறுவரலாற்றுச் சான்றுகளின் படி, சுமத்திராவைச் சேர்ந்த மினாங்கபாவு மக்கள், 17-ஆம் நூற்றான்டில் இங்கு குடியேறினர். கிராமங்களைத் திறந்தனர். இங்குள்ள பூர்வீகப் பெண்களை மணந்தனர். மலாக்கா சுல்தானகத்தின் ஆட்சியின் போது, ரெம்பாவ் அதன் ஆட்சிப் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்ததாக நம்பப் படுகிறது.[1] மினாங்கபாவு மக்கள் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவில் உள்ள மினாங்கபாவு பெருநிலத்தைச் சேர்ந்தவர்கள். தாய்வழி மரபு கலாசாரம்இவர்களின் கலாசாரம் தாய்வழி மரபைச் சார்ந்தது (Matrilineal) பெண்களே ஒரு குடும்பத்தின் தலைவருக்குரிய தகுதியைப் பெறுகிறார்கள். சொத்து உடைமையும் நில உடைமையும் ஒரு தாயிடம் இருந்து ஒரு மகளிடம் போய்ச் சேர்கிறது. அதே சமயத்தில், அரசியல் சமய தொடர்பான காரியங்களுக்கு ஆண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். இவர்களின் இத்தகைய கலாசார மரபை அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். இந்தோனேசியாவில் லாரே புடி கானியாகோ (Lareh Bodi Caniago) என்று அழைக்கிறார்கள்.[2] பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளிநெகிரி செம்பிலான்; ரெம்பாவ் நகரத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் 60 மாணவர்கள் பயில்கிறார்கள். 11 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை இந்தப் பள்ளிக்கு உண்டு.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia