9 அக்டோபர் 2017 (2017-10-09) – 22 பெப்ரவரி 2019 (2019-02-22)
நெஞ்சம் மறப்பதில்லைவிஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 9ம் தேதி 2017 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகி, ஆகஸ்ட் 20ம் தேதி 2018 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'குசும் தோலா' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
இந்த தொடரில் சரண்யா டுராடி சுந்தர்ராஜ், அமித் பார்கவ் மற்றும் சௌமியா ஆகியோர் நடிக்க, அப்துல் ஹபீஸ் இந்தத் தொடரை இயக்க இளையவன் இசை அமைக்கிறார்.[1][2][3][4] இந்த தொடர் பிப்ரவரி 22, 2019 அன்று 358 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
கதை சுருக்கம்
இந்தத் தொடர் விக்ரம், சத்யா மற்றும் சரண்யா ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் முக்கோணக் காதல் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்து புகழ் பெற்ற அமித் பார்கவ் தான் இந்தக் கதையில் விக்ரமாக நடித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ டிவியில் செய்தி வாசிப்பாளர் ஆக இருந்த சரண்யா டுராடி சுந்தர்ராஜ் இந்தத் தொடரின் மூலம் டிவி தொடர் நாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான நிஷா கிருஷ்ணன், சத்யாவாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகுதி 121 முதல் வள்ளி தொடரில் நடித்த சௌமியா நிஷாவுக்கு பதிலாக நடிக்கின்றார். இவர்களோடு ஸ்ரீ துர்கா, அஸ்வந்த் திலக், அனுராதா, எல். லலிதாபோன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இலக்கு அளவீட்டு புள்ளி
இந்த தொடர் ஆரம்பத்தில் சராசரியாக 5.2% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்றது. இதன் கடைசி வார பகுதியில் தமிழ் நாடு அளவில் 4.4% இலக்கு அளவீட்டு புள்ளி பெற்று சிறந்த 20 தொடர்களுக்குள் இந்த தொடர் அடங்கும்.