நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில்
நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் குரோம்பேட்டை பகுதிக்கு அருகிலுள்ள நெமிலிச்சேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2][3][4] கடல் மட்டத்திலிருந்து சுமார் 51 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12°56′53″N 80°09′43″E / 12.9480°N 80.1619°E ஆகும். இக்கோயிலின் மூலவர் அகத்தீசுவரர் மற்றும் இறைவி ஆனந்தவல்லி தாயார் ஆவர். இவர்களது சன்னதிகளுடன், சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் சன்னதி குறிப்பிடத்தக்கவை ஆகும். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம் மற்றும் தீர்த்தம் அகத்திய புஷ்கரணி ஆகும்.[5] தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற கோயில்களில் திருப்பணிகள் நடக்கவுள்ள 55 கோயில்களில், நெமிலிச்சேரி அகத்தீசுவரர் கோயிலும் ஒன்றாகும்.[6] இக்கோயிலின் குளத்தை செம்மைப்படுத்த, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia