நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம்![]() நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் தென்கிழக்கு கோவாவில் அமைந்துள்ளது. [1] இது மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இச்சரணாலயம் சுமார் 211 கி.மீ 2 பரப்பளவில் அமைந்துள்ளது. நேத்ராவலி அல்லது நேதுர்லி என்பது சூஆரி நதியின் முக்கியமான துணை நதியாகும். இந்நதி இந்த சரணாலயத்தில் உருவாகிறது. இச்சரணாலயத்தில் பெரும்பாலும் ஈரமான இலையுதிர் தாவரங்களைக் கொண்ட காடுகளும், பசுமையான, பகுதி பசுமையான வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இச்சரணாலயத்தில் அனைத்து காலங்களிலும் நீர் வரத்துள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. [2] அமைவிடம்நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம் கோவா மாநிலத்தில், கோவா விமான நிலையத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு கோவாவின் சங்கும் வட்டத்தில் உள்ள வெர்லெமில் அமைந்துள்ளது. இதன் கிழக்குப்பகுதியில் கர்நாடகத்தின் தண்டேலி-அன்ஷி புலி பாதுகாப்பகமும், தென்பகுதியில் கோவாவில்கோட்டிகாவோ வனவிலங்கு சரணாலயமும், வடக்குப் பகுதியில் பகவான் மகாவீர் சரணாலயமும் அமைந்துள்ளது.கோவாவின் மேதி வனவிலங்கு சரணாலயமும் கர்நாடாகாவின் பிம்காட் வனவிலங்கு சரணாலயமும் அருகே அமைந்துள்ளது. [3] தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்இந்த சரணாலயத்தில் வளமான வாழ்விடங்கள், ஏராளமான வற்றாத நீரோடைகள் உள்ளதன் காரணமாகப் பாலூட்டிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியன் காட்டெருமை (போஸ் காரசு), [2] மலபார் மாபெரும் அணில் (ரதுஃபா இண்டிகா ), [4] நான்கு கொம்புகள் கொண்ட மான் அல்லது சவுசிங்கா (டெட்ராசெரஸ் குவாட்ரிகார்னிஸ் ), சிறுத்தை (பாந்தெரா பர்தஸ் ), கருப்பு தேன் கரடி உள்ளிட்ட வேட்டை விலங்குகள், தாவர உண்ணிகள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. பறவைகளில் அரிய மலேய இரவு நாரை (Gorsachius melanolophus), நீலகிரி கருப்பு புறா (கொலம்பாஸ் எல்பினிஸ்டோனி), மலை இருவாட்சி ( Buceros bicornis ), சாம்பல் தலை கொண்டைக்குருவி (பைக்னோனோட்டசு பிரியேசெப்பாலசு)[5] வெள்ளை வயிற்று நீல ஈ பிடிப்பான் (சையோரினிசு பாலிபெசு, வயநாட்டுச் சிரிப்பான் (காருலாக்சு டெலெசெட்ரி), வெள்ளை வயிற்று வால் காக்கை (டெண்ட்ரோசிட்டா லுகோகாசுட்ரா), கருஞ்சிவப்பு சிலம்பன் (டர்டோய்டுசு சப்ரூபா) முதலியன அதிகமாகக் காணப்படுகின்றன. இச் சரணாலயத்தில் அரிய பட்டாம்பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை: மலபார் தகைவிலான் வாலி (பேப்பிலியோ லியோமெடான்) மலபார் மயில் (பேப்பிலியோ புத்தர் ), மலபார் மரம் தேவதை (ஐடியா மலபாரிகா), தென் அழகி (டிராய்டெசு மினோசு), இரட்டைவால் நீலச் சிறகன் (பாலியுர ஸ்கெர்ய்பெர்) கருப்பு ராஜா (சராக்ஸ் சோலன் ) மற்றும் ரெட்ஸ்பாட் டியூக் (டோப்லா எவெலினா). [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia