நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள் (World Heritage Sites in Nepal) என, நேபாளத்தின், காத்மாண்டு சமவெளியில் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயத்தின் எட்டு பண்பாட்டுக் களங்களை உலகப் பாரம்பரியக் களங்களாகவும், இரண்டு தேசியப் பூங்காக்களை இயற்கையான உலகப் பாரம்பரியக் களங்களாகவும் யுனேஸ்கோ அங்கீகரித்துள்ளது[1]. அவையாவன:
பண்பாட்டுக் களங்கள்பசுபதிநாத் கோவில்![]() பசுபதிநாத் கோவில், நேபாளத் தலைநகரான காட்மாண்டு நகரின் கிழக்குப் பகுதியில் பாயும் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பதான் அரண்மனை சதுக்கம்![]() நேபாளத்தின் காட்மாண்டு, பொக்காரா ஆகியவற்றுக்கு அடுத்து பதான் மூன்றாவது பெரிய நகரமாகும். காத்மாண்டு நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், லலித்பூர் மாவட்டத்தில் பாதன் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள அரணமனையின் முன் அமைந்துள்ள நகர சதுக்கம் உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக திகழ்கிறது. கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களின் மையமாக பாடன் நகரம் உள்ளது. இந்நகர் திருவிழாக்களுக்கும், விருந்தோம்பலுக்கும், பண்டைய நுண் கலைகளுக்கும் பெயர் பெற்றது. உலோக மற்றும் கல் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்குகிறது. பக்தபூர் நகர சதுக்கம்![]() பக்தபூர் நகர சதுக்கம், நேபாள நாட்டின் பழைய தலைநகரான பக்தபூர் நகர அரண்மனை முன் அமைந்த வணிக வளாகமாகும். காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று நகர சதுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். [2] காட்மாண்டு நகரிலிருந்து கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பக்தபூர் சதுக்கத்தை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமன் தோகா நகர சதுக்கம்![]() நேபாளத்தின் காத்மாண்டு அரண்மனை முன் அமைந்துள்ள நகர மைய வணிக வளாகமாகும். இது காத்மாண்டு சமவெளியில் உள்ள மூன்று நகர சதுக்கங்களில் ஒன்றாகும். இம்மூன்று நகர சதுக்கங்களும் யுனேஸ்கோவால் உலகப் பாரம்பரியக்களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[3]. சங்கு நாராயணன் கோயில்![]() நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தின் தோலகிரி மலைப் பகுதியில் சங்கு என்ற கிராமத்தில் அமைந்த பண்டைய இந்து சமயக் கோயிலாகும். காத்மாண்ட் நகரத்தின் கிழக்கில் இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரத்திற்கு வடக்கே சில கிலோ மீட்டர் தொலைவிலும் சங்கு நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருமாலுக்கு அர்பணிக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனேஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக சங்கு நாராயணன் கோயில் விளங்குகிறது. பௌத்தநாத்து![]() நேபாள நாட்டின் திபெத்திய பௌத்தர்களின், பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து தூபி, கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத்து மடாலயம், நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டூ நகரத்தின் கிழக்கில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்துள்ளது. வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத்து மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத்து மடாலயத்தை, உலக தொல்லியற்களங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் அவையின், யுனேஸ்கே நிறுவனம், 1979இல் அறிவித்ததுது.[4] சுயம்புநாதர் கோயில்![]() நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் ஸ்தூபியுடன் அமைந்த பண்டைய கால பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்த யாத்திரிகர்களுக்கு புனிதமான மலைக் கோயிலாகும். [5] சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளது. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம். லும்பினி![]() நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கௌதம புத்தர் பிறந்தார். இவரே பௌத்த சமயத்தை தோற்றுவித்தவர் ஆவார். பௌத்த யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. இங்கு கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கரனி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும். லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[6] தேசியப் பூங்காக்கள்சித்வான் தேசியப் பூங்கா![]() நேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்கா, சித்வான் தேசிய பூங்காவாகும். காட்மாண்டிற்கு மேற்கே 150 கிலே மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பூங்கா 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனேஸ்கெவால் இயற்கையான உலகப் பாரம்பரிய களங்களின் ஒன்றாக அங்கீகரிப்பட்டது. இத்தேசியா பூங்கா 932 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வன் மாவட்டம், நவல்பராசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.[7] சாகர்மாதா தேசியப் பூங்காகாட்மாண்டு நகரத்திலிருந்து வடகிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவில், சோலுகும்பு சோலுகும்பு மாவட்டத்தில், எவரஸ்டு மலையின் அடிவாரத்தில், 2845 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பனிச்சிறுத்தைகளும், சிவப்பு பாண்டா கரடிகளும் அதிகம் உள்ளது. 1148 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட சாகர்மாதா தேசியப் பூங்காவை, யுனேஸ்கோவால், இயற்கை சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக, 1979ஆம் ஆண்டில் அங்கீகரித்துள்ளது.[8] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia