நேவார் மக்கள் அல்லது நேவா மக்கள் (Newar or Newah) Newar: नेवा:)[2]நேபாள நாட்டின் காட்மாண்டு சமவெளியில் வரலாற்றுக் காலம் முதல் வாழும் மக்கள் ஆவார்.[3]இந்தோ ஆரிய மக்களான நேவாரிகள் மற்றும் திபெத்தோ-பர்மிய மக்கள், தங்களுக்கென தனி மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள் கொண்டிருந்தனர். நேவாரி மொழி மற்றும் திபெத்தோ-பர்மிய மொழிகள் பேசிய நேவாரி மக்கள் இந்து சமயம் மற்றும் பௌத்த சமயங்களை கடைப்பிடித்தனர்.[4]
பண்டைய பரத கண்டத்தின் இந்து சமயத்தவர்கள் போன்று, நேவார் இந்து சமய மக்களும், வர்ணாசிரம வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கின்றனர்.[5] நேவார் மக்கள், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு மற்றும் நாகரீகத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வாழ்கின்றனர்.[6][7]
நேபாளம், நேவார், நேவால் மற்றும் நேபார் எனும் சொற்கள் உச்சரிப்பில் வேறுபட்டாலும், ஒரே பொருளைக் குறிக்கும். நேபாள மொழிசமசுகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நேவாரி மொழி பிராகிருத மொழியை அடிப்படையாகக் கொண்டதாகும்.[10]
நேவார் எனும் சொல்லிற்கு நேபாள நாட்டின் மண்ணின் மைந்தர்கள் எனப்பொருள் என்பதை 1654-இல் காத்மாண்டில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்பினால் அறியப்படுகிறது.[11][12]
1721-இல் நேபாளத்தில் பயணம் செய்த இத்தாலிய இயேசு சபையைச் சேர்ந்த கிறித்துவ மதப்பிரசாரகர் இப்போலித்தோ தேசிதேரி என்பவர், நேவாரிகளை நேபாள நாட்டின் பழங்குடி மக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.[13]
2001ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேவாரி மக்களில் 84.13 விழுக்காட்டினர் இந்துக்களாகவும், 15.31 விழுக்காட்டினர் பௌத்த சமயத்தவர்களாகவும் இருந்தனர். மிகக் குறைந்த அளவு நேவாரி மக்கள் கிறித்தவ, இசுலாமிய சமயங்களைப் பயில்கின்றனர்.
பதான் நகரத்தில் அசோகர், நான்கு தூபிகள் நிறுவியுள்ளார்.
மகர், ராய், லிம்பு, குரூங் மக்களைப் போன்று நேவாரிகள் நேபாள மண்ணின் மைந்தர்கள் ஆவார்.
↑ 3.03.1von Furer-Haimendorf, Christoph (1956). "Elements of Newar Social Structure". Journal of the Royal Anthropological Institute (Royal Anthropological Institute of Great Britain and Ireland) 86: 15–38. doi:10.2307/2843991. Page 15.
↑Levy, Robert I. (1991). "Nepal, the Kathmandu Valley, and Some History". Mesocosm: Hinduism and the Organization of a Traditional Newar City in Nepal. University of California Press. p. 34. Retrieved 22 May 2011.
↑Tree, Isabella. "Living Goddesses of Nepal". www.nationalgeographic.com. National Geographic.
2011-ஆம் ஆண்டு நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நேவாரி மக்கள் தொகை 13,21,933-ஆக உள்ளது. இது நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காடு ஆகும்.
↑Waller, Derek J. (2004). The Pundits: British Exploration Of Tibet And Central Asia. University Press of Kentucky. p. 171. ISBN978-0813191003.
↑Lewis, Todd T.; Tuladhar, Subarna Man (2009). Sugata Saurabha An Epic Poem from Nepal on the Life of the Buddha by Chittadhar Hridaya. Oxford University Press. p. 5. ISBN978-0199712014.
↑Majupuria, Trilok Chandra; Majupuria, Indra (1979). Glimpses of Nepal. Maha Devi. p. 8. Retrieved 2 December 2013.
↑Desideri, Ippolito and Sweet, Michael Jay (2010). Mission to Tibet: The Extraordinary Eighteenth-Century Account of Father Ippolito Desideri, S.J.. Wisdom Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0861716760. Page 463.
மேலும் படிக்க
Bista, Dor Bahadur (2004). People of Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar.