நோர்போக் தீவு
நோர்போக் தீவு (Norfolk Island, நோர்ஃபோக் தீவு, ⓘ, நோர்புக்: Norf'k Ailen[6]) என்பது பசிபிக் பெருங்கடலில் ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இத்தீவு ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பின் எவான்சு ஹெட் என்ற இடத்தில் இருந்து நேர்கிழக்கே 1,412 கி.மீ. தூரத்திலும், லோர்ட் ஹாவ் தீவில் இருந்து 900 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. 35 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள்தொகை 1,796 ஆகும்.[7] இதன் தலைநகர் கிங்சுடன் ஆகும். நோர்போக் தீவில் கிழக்குப் பொலினேசியர்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர். ஆனால், 1788 இல் பெரிய பிரித்தானியாவின் ஆத்திரேலியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்படும் போது இத்தீவு நீண்ட காலமாக மக்களில்லாத தீவாக இருந்து வந்தது. 1788 மார்ச் 6 முதல் 1855 மே 5 வரை (1814 முதல் 1825 காலப்பகுதி நீங்கலாக) இத்தீவில் குற்றவாளிகள் குடியேற்றப்பட்டனர்.[8][9]. 1856 சூன் 8 இல் இங்கு பிட்கன் தீவுகளில் இருந்து மக்களின் நிரந்தரக் குடியேற்றம் ஆரம்பமானது. 1913 இல், ஐக்கிய இராச்சியம் நோர்போக் தீவின் நிருவாகத்தை ஆத்திரேலியாவிடம் கையளித்தது. இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும். நோர்போக் இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆத்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக சுயாட்சி அதிகாரத்துடன் நிர்வகிக்கப்படுகிறது. 2015 மே 14 இல் நோர்போக் தீவு சட்டத் திருத்த சட்டமூலம் 2015 ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நோர்போக் தீவின் சுயாட்சி அதிகாரம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இத்தீவு நியூ சவுத் வேல்சு மாநிலத்தின் ஓர் உள்ளூராட்சி அமைப்பாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.[10] இதன் படி, 2016 சூலை 1 முதல் நோர்போக் தீவு சட்டம் நியூ சவுத் வேல்சி மாநிலத்துக்கு மாற்றப்படுகிறது.[11] வரலாறுஆரம்ப வரலாறுநோர்போக் தீவில் மனிதக் குடியேற்றம் நியூசிலாந்தின் வடக்கேயுள்ள கெர்மாடெக்குத் தீவுகளில் இருந்தோ அல்லது வடக்குத் தீவில் இருந்தோ வந்த கிழக்குப் பொலினீசியக் கடலோடிகளினால் ஆரம்பமானது. இவர்கள் கிபி 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வந்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்து பின்னர் மறைந்து விட்டார்கள்.[12] ஜேம்ஸ் குக் முதற்தடவையாக 174 அக்டோபர் 10 இல் இங்கு கால் வைத்த போது இது மனிதரற்ற தீவாக இருந்தது.[8][9] இத்தீவிற்கு அவர் நோர்போக் கோமகள் மேரி அவார்டின் நினைவாக நோர்போக் தீவு எனப் பெயரிட்டார்.[13] 1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு நியூ சவுத் வேல்சு குடியேற்றத் திட்டத்தின் ஒரு துணைக் குடியேற்றமாக இத்தீவை அறிவித்தது. அக்காலத்தில் சணல் கயிறின் விற்பனைக்கு உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. நோர்போக் தீவில் சணல் விளைச்சல் அதிகமாக இருந்ததும் இத்தீவில் குடியேற்றம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தது. 1788 சனவரியில் முதலாவது குடியேற்றக் கப்பல் ஜாக்சன் துறையை வந்தடைந்த போது, ஆளுனர் ஆர்தர் பிலிப் அக்குடியேறிகளில் இருந்து 15 குற்றவாளிக் கைதிகளையும் மேலும் ஏழு பொது மக்களையும் லெப். பிலிப்பு கிட்லி கிங் என்பவரின் தலைமையில் நோர்போக் தீவில் குடியேறக் கட்டளையிட்டார். இவர்கள் 1788 மார்ச் 6 ஆம் நாள் நோர்போக் தீவை வந்தடைந்தனர். இக்குடியேற்றத்திட்டத்தின் முதலாம் ஆண்டில் மேலும் பல குற்றக்கைதிகளும், படைவீரர்களும் நியூ சவுத் வேல்சில் இருந்து நோர்போக் தீவுக்கு அனுப்பப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு![]() 1794 இன் ஆரம்பத்தில், நோர்போக் தீவு அதிக தூரத்தில் இருப்பதால் அக்குடியேற்றேத்தைப் பராமரிக்க பெருமளவு செலவு ஏற்படும் என்ற காரணத்தால் நியூ சவுத் வேல்சின் பதில் ஆளுனர் பிரான்சிசு குரோசு இக்குடியேற்றத்தை மூடிவிட முடிவெடுத்தார்.[14] இதனை அடுத்து 1805 பெப்ரவரியில் ஒரு தொகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர். 1808 ஆம் ஆண்டில் அங்கு 200 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். 1813 இல் ஒரு சிலரைத் தவிர அனைவரும் வெளியேறினர். வேறு எந்த ஐரோப்பிய நாடுகளும் இப்பிரதேசத்தை உரிமை கோராமல் இருப்பதற்காக அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் எஞ்சியிருந்தவர்களால் தகர்க்கப்பட்டன. 1814 பெப்ரவரி 15 முதல் 1825 சூன் 6 வரை ஆளில்லா தீவாக அது இருந்தது. 1824 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு மீண்டும் இங்கு குடியேற்றத்தை ஆரம்பித்தது. மிகக் கடுமையான குற்றமிழைத்த ஆண்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர்.[15] இந்த இரண்டாவது குற்றக் கைதிகளின் குடியேற்றம் 1847 இற்குப் பின்னர் குறைவடைந்தது. இங்கிருந்த கடைசிக் குற்றவாளிகள் 1855 மே மாதமளவில் தாசுமேனியாவிற்கு மாற்றப்பட்டனர். 1856 சூன் 8 இல் அடுத்த குடியேற்றம் இங்கு ஆரம்பமானது. தாகித்தியர்களின் வம்சாவழியினரும், பிரித்தானியக் கடற்படையின் எச்.எம்.எசு பவுண்டி கப்பலில் கிளர்ச்சி செய்த கிளர்ச்சியாளர்களும் தாகித்தியில் இருந்து இங்கு வந்து குடியேறினர். 1856 மே 3 இல் பிட்கன் தீவுகளில் இருந்து 193 பேர் கப்பல் மூலம் வெளியேறி இங்கு வந்தனர்.[16] 1856 சூன் 8 இல் இவர்கள் இங்கு வந்திறங்கினர்.[17] இவர்கள் இங்கு வந்து கமம் மற்றும், திமிங்கிலவேட்டை போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். இத்தீவின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்தது. 1867 இல், இங்கிலாந்து திருச்சபையின் மெலினீசியப் பணித்திட்டம் இத்தீவில் ஆரம்பமானது. 1920 இல் இம்மதப் பிரிவினரின் தலைமையகம் சொலொமன் தீவுகளுக்கு இடம் மாறியது. பிற்கால வரலாறு1901 ஆம் ஆண்டில் ஆத்திரேலியப் பொதுநலவாயம் உருவாகியதை அடுத்து, நோர்போக் தீவு புதிய ஆத்திரேலிய அரசின் வெளிக்களப் பிரதேசமாக நுருவகிக்கப்பட்டது. ![]() இரண்டாம் உலகப் போரின் போது, இத்தீவு முக்கிய வான்தளமாகவும், ஆத்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயும், நியூசிலாந்துக்கும் சொலமன் தீவுகளுக்கும் இடையே முக்கிய எரிபொருருள் நிரப்பும் தளமாகவும் இயங்கியது. இங்குள்ள விமான ஓடுபாதை 1942 இல் ஆத்திரேலிய, நியூசிலாந்து, மற்றும் அமெரிக்கப் படையினரால் நிர்மாணிக்கப்பட்டது.[18] நோர்போக் தீவு அமைந்திருந்த பிரதேசம் நியூசிலாந்தின் பொறுப்பில் இருந்ததால், இது நியூசிலாந்து இராணுவத்தினரின் மேற்பார்வைக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 1,500 நியூசிலாந்து இராணுவத்தினர் இத்தீவில் நிலை கொண்டிருந்தனர். இத்தீவு இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஆபத்தான பிரதேசத்தில் இருக்காததால் நியூசிலாந்துப் படையினர் 1944 பெப்ரவரியில் இங்கிருந்து வெளியேறினர். 1979 ஆம் ஆண்டில் இத்தீவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரத்தை ஆத்திரேலியா வழங்கியது. இதனை அடுத்து அங்கு நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.[19] நிதி நெருக்கடி, மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருச்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் 2010 ஆம் ஆண்டில் இத்தீவின் நிருவாகம் ஆத்திரேலிய அரசிடம் நிதியுதவியைக் கோரியது. இதற்குப் பதிலாக, இத்தீவில் உள்ளோர் ஆத்திரேலிய அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என ஆத்திரேலிய அரசு கேட்டது.[20] ஆனாலும், இவ்வொப்பந்தம் எட்டப்படவில்லை.[21] இறுதியாக நோர்போக் தீவு அரசின் விருப்பத்திற்கு மாறாக, 2015 மார்ச் 12 இல் சுயாட்சி அரசை முடிவுக்குக் கொண்டு வந்து, இத்தீவை ஆத்திரேலிய மாநிலத்தின் உள்ளூராட்சி அமைப்பாக மாற்றுவதற்கு அத்திரேலிய அரசு முடிவு செய்தது.[22][23] நோர்போக் தீவில் மேற்கொள்ளப்பட்ட பொது வாக்கெடுப்பில் 68% மக்கள் இத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.[24] 2015 அக்டோபர் 4 இல், நோர்போக் தீவு அதன் நேர வலயத்தை ஒசநே+11:30 இலிருந்து ஒசநே+11:00 ஆக மாற்றியது.[25] புவியியல்![]() நோர்போக் தீவு தெற்குப் பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பின் கிழக்கே 29°02′S 167°57′E / 29.033°S 167.950°E என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.6 சதுர கிலோமீட்டர்கள் (13.4 sq mi) ஆகும். இதன் கரையோரப் பகுதியின் நீளம் 32 km (20 mi) ஆகும். இத்தீவின் மிக உயரமான இடம் தீவின் வடமேற்கேயுள்ள பேட்சு குன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 319 மீட்டர்கள் (1,047 அடிகள்) உயரமாகும். தீவின் பெரும்பகுதி நிலப்பரப்பு கமத்தொழிலுக்கும், மெற்றும் வேளாண்மைக்கும் உகந்தது. இத்தீவின் தெற்கே ஏழு கி.மீ. தூரத்தில் பிலிப்பு தீவு அமைந்துள்ளது. இது இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவாகும். ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. ![]() நோர்போக் தீவின் கரையோரப் பகுதிகள் செங்குத்தான பாறைகள் வடிவில் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. கிங்சுடனின் ஆரம்பகால குடியேற்றப் பகுதிகளான சிலோட்டர் விரிகுடா, எமிலி விரிகுடா போன்றவற்றுக்கு சரிவான பாதைகள் உள்ளன. பாதுகாப்பான துறைமுக வசதிகள் இத்தீவில் இல்லை. கின்சுடன், மற்றும் காசுகேடு குடாவில் படகுத்துறைகள் காணப்படுகின்றன. உள்ளூரில் உற்பத்தியாகாத பொருட்கள் கப்பல் மூலம் காசுகேடு குடாவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. எமிலி குடா சிறிய பவளப் பாறைகளால் பசிபிக் பெருங்கடலில் இருந்து பாதுகாக்கப்படுவதால், இது முக்கியமாக பொழுதுபோக்கு, மற்றும் நீச்சலுக்கேற்ற கடலாக உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia