பண்டிட் ஜஸ்ராஜ்
சங்கீத மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ் (Sangeet Martand Pandit Jasraj) (பிறப்பு: ஜனவரி 28, 1930-இறப்பு: 17 ஆகத்து 2020 ) ஒரு இந்திய இந்துஸ்தானிய இசைப் பாடகராவார். மேவதி கரானாவைச் சேர்ந்த (இசை பயிற்சி பெற்ற பரம்பரை) இவரது இசை வாழ்க்கை 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. மேலும், ஏராளமான பெரிய விருதுகளுக்கும் வழிவகுத்தது. இந்துஸ்தானி மற்றும் அரை இந்துஸ்தானி குரல்கள் இவரது இசைத்துப்பாகவும், திரைப்பட ஒலிப்பதிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இவர் இசையினைக் கற்றுக் கொடுத்தார். இவரது மாணவர்களில் சிலர் குறிப்பிடத்தக்க இசைக்கலைஞர்களாக இருந்து வருகின்றனர். 1975இல் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசண் விருது வழங்கியது. ஆரம்ப கால வாழ்க்கைசங்கீத மார்த்தாண்ட ஜஸ்ராஜ் 1930 சனவரி 28 அன்று அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பிலி மண்டோரி என்ற கிராமத்தில் ஒரு நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் ஒரு இந்துஸ்தானிய பாடகரான சங்கீத ரத்ன பண்டிட் மோதிராம் என்பவருக்கு பிறந்தார்.[1] 1934 இல் இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, மிர் ஒஸ்மான் அலிகானின் அவையில் மாநில இசைக்கலைஞராக நியமிக்கப்படவிருந்த நாளில் இவரது தந்தை மோதிராம் இறந்தார்.[2][3] இவரது அண்ணன் பிரதாப் நரேன் என்பவரும் ஒரு திறமையான இசைக்கலைஞராவார். இவர் இசையமைப்பாளர் இரட்டையர் ஜதின்-லலித், பாடகியும், நடிகையுமான சுலக்சனா பண்டிட் மற்றும் நடிகை விஜெட்டா பண்டிட் ஆகியோரின் தந்தையாவார்.[4] இவர் தனது இளமைக் காலத்தை ஐதராபாத்தில் கழித்தார். மேலும் குசராத்தின் சனந்த் நகருக்குச் சென்று மேவதி கரானாவின் இசைக்கலைஞர்களுடன் இசை பயின்றார்.[5] இந்துஸ்தானி இசையில் ஆழ்ந்த அர்ப்பணிப்புள்ள சனந்தின் தாகூர் சாஹிப் மகாராஜ் ஜெயவந்த் சிங் வாகேலாவுக்காக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்,[6] அவரிடமிருந்து பயிற்சியும் பெற்றுள்ளார். 1946 ஆம் ஆண்டில், இவர் கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு இவர் வானொலியில் இந்துஸ்தானி இசையைப் பாடத் தொடங்கினார்.[5] தனிப்பட்ட வாழ்க்கை1962 ஆம் ஆண்டில் இவர் திரைப்பட இயக்குநர் வி.சந்தாராமின் மகள் மதுரா சாந்தாராம் என்பவரை மணந்தார். அவரை 1960 இல் பம்பாயில் முதன்முதலில் சந்தித்தார்.[7] இவர்கள் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் வசித்து வந்தனர். பின்னர், 1963 இல் மும்பைக்கு சென்றனர்.[8][9] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், சரங் தேவ் பண்டிட் என்ற ஒரு மகனும், மற்றும் துர்கா ஜஸ்ராஜ் . என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி மதுரா பாலேக்கள், கீத-கோவிந்தம், கான் கஹானி மற்றும் சூர்தாஸ் ஃபாஸ்டர் ஃபீன் போன்ற தொலைக்காட்சி தொடர்களையும், ஆவணப்படங்களையும் மற்றும் சிறுவர் நாடகங்களையும் இயக்கி தயாரித்துள்ளார். இவர் 2009 ல் 'சங்கத் மார்த்தாண்ட பண்டிதர் ஜஸ்ராஜ்' என்ற திரைப்படத்தை தயாரித்தார்.[10] இவர் ஆய் துசா ஆசீர்வாத் என்ற மராத்தித் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜஸ்ராஜும் லதா மங்கேஷ்கரும் மராத்தியில் பாடியுள்ளனர்.[11] தொழில்பயிற்சிஜஸ்ராஜ் தனது தந்தை பண்டிட் மோதிராமிடம் குரல் இசையில் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கைம்முரசு இணையில் (தபேலா) தனது அண்ணன் பண்டிட் பிரதாப் நாராயணனின் துணையுடன் பயிற்சி பெற்றார். இவர் தனது அண்ணன் பண்டிட் மணிராமுடன் தனது தனி குரல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடி வந்தார் .[12] இந்துஸ்தானி இசையை தான் தேர்ந்தெடுக்கத் தூண்டியதற்காக பாடகர் பேகம் அக்தரை இவர் பாராட்டுகிறார்.[7] மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia