பதேகாட் சாகிப் மாவட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் மாவட்டங்கள்
பதேகாட் சாகிப் மாவட்டம்
மாவட்டம்
அடைபெயர்(கள்): FGS
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பதேகாட் சாகிப்
பரப்பளவு
 • மொத்தம்1,180 km2 (460 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,00,163
 • அடர்த்தி509/km2 (1,320/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://fatehgarhsahib.nic.in/
"Fatehgarh Sahib". Sikhtourism. Retrieved 2008-06-30.

பதேகாட் சாகிப் மாவட்டம் (Fatehgarh Sahib district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பதேகாட் சாகிப் ஆகும்.

பஞ்சாப் மாநிலத்தின் குறைவான மக்கள் தொகை கொண்ட பர்னாலா மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவதாக பதேகாட் சாகிப் மாவட்டம் உள்ளது.[1]

மாவட்ட அமைவிடம்

பஞ்சாப் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த பதேகாட் சாகிப் மாவட்டத்தின் வடகிழக்கில் ரூப்நகர் மாவட்டம், கிழக்கில் மொகாலி மாவட்டம், தென்கிழக்கில் பட்டியாலா மாவட்டம், தென்மேற்கில் சங்கரூர் மாவட்டம், வடமேற்கில் லூதியானா மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் பஸ்சி பதானா, பாதேகாட் சாகிப், அம்லோ மற்றும் கமனொன் என நான்கு வருவாய் வட்டங்களையும்; 446 கிராமங்களையும்; பஸ்சி பதானா, சிர்ஹிந்த் பதேகாட் சாகிப், அம்லோ, கோபிந்துகாட் மற்றும் கமனோன் எனும் ஐந்து நகராட்சி மன்றங்களையும்; பஸ்சி பதானா, கேரா, சர்ஹிந்த், அம்லோ மற்றும் கமனோன் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,00,163 ஆக உள்ளது. நகர்புறங்களில் 30.9% மக்கள் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 11.5% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 3,20,795 ஆண்களும் மற்றும் 2,79,368 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 871 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 1180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 509 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 79.4 % ஆக உள்ளது. மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 1,92,493 ஆக உள்ளனர். [2]

சமயம்

இம்மாவட்டத்தில் சீக்கிய சமய மக்கள் தொகை 71.23% ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 25.47% ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 2.80% ஆகவும், கிறித்தவ, பௌத்த, சமண சமய மக்கள் தொகை மிகக் குறைவாக உள்ளது. [3]

மொழிகள்

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya