பத்துஜெயா கோயில் வளாகம்
பத்துஜெயா கோயில் வளாகம் (ஆங்கிலம்: Batujaya Temple Complex இந்தோனேசிய மொழி: Percandian Batujaya) என்பது இந்தோனேசியா, மேற்கு ஜாவா, காரவாங், பத்துஜெயா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளமாகும். பத்துஜெயா கோயில்கள் ஜாவாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோயில் கட்டமைப்புகளாக இருக்கலாம் என்றும்; தருமநகரா இராச்சியத்தின் போது, கிபி. 5 – கிபி. 6-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.[1] பொது![]() ![]() ![]() ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்தத் தளம்; ஏறக்குறைய 30 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.[2] இந்தக் கட்டமைப்புகள், சுந்தானிய மொழியில் உன்யூர் (Hunyur) அல்லது ஊனூர் (Unur) என்று அழைக்கப்படுகின்றன. 1984-இல் இந்தோனேசியப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்களால் இந்தத் தளம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் இருந்து 17 கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மூன்று கட்டமைப்புகள் குளங்களின் வடிவில் உள்ளன. கட்டமைப்புபத்து ஜெயா ஆலயக் கட்டமைப்புகள் களிமண் மற்றும் அரிசி உமிகளின் கலவை கொண்ட செங்கற்களால் ஆனது. அந்தக் கட்டமைப்புகள் எரிமலை பாறைகளால் உருவாக்கப்படவில்லை. மீட்கப்பட்ட இரண்டு கட்டமைப்புகள் கோயில் வடிவில் உள்ளன. அவற்றில் ஜீவா கோயில் (Jiwa Temple) என அழைக்கப்படும் கோயில் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு உள்ளது. பாண்டுங் தொல்லியல் அமைப்பின் (Bandung Archeology Agency) தலைவரான டாக்டர் டோனி திஜுபியன்டோனோ (Dr. Tony Djubiantono) என்பவரின் கூற்றுப்படி, ஜீவா கோயில் 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். வரலாறுஇந்தோனேசியாவின் மிகப் பழமையான இந்து-பௌத்த இராச்சியமான தருமநகராவின் இருப்பிடத்திற்குள் பத்து ஜெயா ஆலயங்கள் இருப்பதால் இந்த தொல்பொருள் தளத்தின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பத்து ஜெயா கட்டமைப்புகள் கண்டுபிடிப்புக்கு முன், மேற்கு ஜாவாவில் பழங்கால கோயில் எச்சங்கள் எதுவும் இல்லை. இதற்கு முன்னர், மேற்கு ஜாவாவில் நான்கு கோயில் தளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. இந்தோனேசிய பண்பாட்டுப் புதையல் செல்வம்5-ஆம் மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜீவா கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான சிறிய களிமண் பலகைகள் மற்றும் பிரார்த்தனையில் பயன்படுத்தப்படும் புத்தரின் படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் காணப்படும் கல்வெட்டு அமைப்புகளின் அடிப்படையில் ஐந்தாம்; ஆறாம் நூற்றாண்டு கால உறுதிப்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2019-இல், பத்துஜெயா கோயில் வளாகம் இந்தோனேசிய தேசிய பண்பாட்டுப் புதையல் செல்வம் (Indonesian National Cultural Treasure) என அறிவிக்கப்பட்டது.[3] காட்சியகம்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia