பனங்கிழங்குபனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும். ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஓர் அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக்கிழங்கு ஓர் அடி வரை நீளமானது. பனை மரத்தில் உள்ள நுங்கு பனை பழமாக மாறி அதன் பின்பு அதை வெட்டி எடுத்து பனைபழத்தை பிரித்து மூன்று மூன்றாக இருக்கும் அதை தனித்தனியாக பிரித்து வெயிலில் காய வைத்து பின்பு ஒரு மணல் திருட்டு போல் உருவாக்கி அதில் இந்த பனை பழத்தை காய்ந்த பனைபழத்தை முளைப்பதற்கு ஏற்றாலும் போல் அதில் வரிசையாக நட்டு பின்பு சுற்றி மணலை போட்டு அதில் வட்டமாக பாத்தி பிடித்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே வரவேண்டும் நன்கு மிதித்து மிதித்து தண்ணீர் ஊற்ற வேண்டும் காலப்போக்கில் அது முளைக்க ஆரம்பித்து விடும் பின்பு மூன்று மாதம் கழித்து அதைத் தோண்டி பார்த்தால் பனங்கிழங்கு தயாராக இருக்கும் இவ்வாறு தான் பனங்கிழங்கு உற்பத்தி செய்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் இருப்பதால் அங்கு மிகவும் பிரபலமாக உள்ளது உருவாக்குதல்பனம்பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர். பொதுவாக பனங்கிழங்கு திருவண்ணாமலை , வேலூர் , விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. பயன்கள்![]()
இலக்கியத்தில் பனங்கிழங்குநாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.[1][2][3]
வலம்புரி ஒலித்தது! என்ற 225 ஆவது புறநானூற்றுப் பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் சோழ மன்னன் நலங்கிள்ளியின் படையின் சிறப்பை பாராட்டுகிறார். அதில்
என்று குறிப்பிடுகிறார். முன்னே செல்லும் படையினர் வழியில் பனைமரங்களைக் கடக்கும்பொழுது பனை நுங்கின் இனிமை கொண்ட நீரை உண்ணுவர்; இடைப்பகுதியில் உள்ளோர் மரங்களைக் கடக்கும்பொழுது பனம்பழத்தின் இனிய கனிப்பகுதியை உண்ணுவர். படையின் இறுதியில் செல்பவர் "பிசிரொடு சுடுகிழங்கு" (தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கை) உண்ணுவர். இளநுங்கு, அது பழுத்து பனம்பழம், பழத்தின் கொட்டையில் இருந்து விளைவித்த பனங்கிழங்கு யாவையும் வெவ்வேறு காலங்களில் விளைபவை. அவ்வாறு காலங்கள் கடந்து கடக்கும் பெரும்படையை உடையவன் சோழன் நலங்கிள்ளி எனப் பாடுகிறார் புலவர்.[4] இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia