பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்
பெயர் மாற்றம்முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயரை, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் என மாற்றம் செய்ய இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 14 அக்டோபர் 2017 அன்று முடிவு செய்துள்ளது. [4] மின்மயமாக்கம்கயா - முகல்சராய் வழித்தடத்தில் உள்ள நிலையங்கள் 1961-63 ஆண்டுவாக்கில் மின்மயமாக்கப்பட்டன. 1963-65 ஆண்டுவாக்கில் முகல்சராய் பணிமனையும் மின்மயமாக்கப்பட்டது.[5] பயணிகள்இது இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[6] ஆண்டுதோறும் 65 லட்சம் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.[3] வசதிகள்இங்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளும், சாதாரண ஓய்வறைகளும், உணவகமும் உள்ளன. பணவழங்கி இயந்திரமும் உள்ளது.[7] இந்த நிலையத்தில் இலவச வை-பை வசதியும் உண்டு.[3] இதனையும் காண்கசான்றுகள்
மற்ற வலைத்தளங்களில்
|
Portal di Ensiklopedia Dunia