பனையபுரம் அதியமான்
பனையபுரம் இரா. ப. அதியமான், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்த புலவர் இராம. பழனிச்சாமி - ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு அக்டோபர் 4, 1958 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளாராக பணியாற்றிய அதியமான், 2016-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூகம் மற்றும் பகுதி நேர வானொலி செய்தி வாசிப்பாளர் எனப்பன்முகத் தன்மை கொண்டவர். படைப்புகள்நூல்கள்பனையபுரம் அதியமானின் படைப்புகளில் திருத்தலங்களுக்கான வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுக் குறிப்புகள், கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைகளின் சிறப்புகளைக் கூறும். இவர் இயற்றிய ஆன்மீக நூல்கள் பின்வருமாறு:
கட்டுரைகள்ஆனந்த விகடன் வார இதழ் இதழில், இவரது 10 ஆன்மீகக் கட்டுரைகள் வெளிவந்துள்ளது.[5] பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்2013 ஆம் ஆண்டில் பனையபுரம் வழியாக விக்கிரவாண்டி - தஞ்சாவூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45 சி-ஐ விரிவாக்கம் செய்த போது, பனங்காட்டீஸ்வரர் கோயிலை அகற்றிட அரசு முனைந்தது. பனையபுரம் அதியமான் சிவ பக்தர்கள், பத்திரிக்கையாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அறவழியில் போராடி, பனங்காட்டீஸ்வரர் கோயிலை நெடுஞ்சாலைத் துறையால் இடிக்கப்படாமல் பாதுகாத்தார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia