பனையப்பட்டி ஊராட்சி
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
காவல் நிலையம்பனையப்பட்டியில் திருமயம் - பொன்னமராவதி சாலையில் பூஞ்சோலை நகரில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம்பனையப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசின் உதவியுடன் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. வங்கிகள்இங்கு அரசுடமையாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி[7], தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி[8] ஆகியவை செயல்பட்டு வருகிறது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தானியங்கி பண சேவையை வங்கி நேரங்களில் பயன்படுத்தலாம். தனியார் வங்கியின் ஒரு தானியங்கி பண சேவையும் பனையப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வருகிறது. அஞ்சல் குறியீட்டு எண்பனையப்பட்டியில் கிளை அஞ்சல் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு மேலே உள்ள அஞ்சல் அலுவலகம் குழிபிறை. அஞ்சல் குறியீடு எண்[9] : 622 402 பள்ளிகள்இங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றும்,துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது. இரண்டுமே உதவி பெரும் பள்ளிகள்.[10]. இரு பள்ளிகளிலும் சுமார் 450 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். கோயில்கள்இந்த ஊரின் எல்லையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஊரின் பேருந்து நிலையம் அருகில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தேவாலயம் ஒன்று உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தேவாலயத்தில் விழா நடக்கிறது போக்குவரத்துஅரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இங்கு ஓடுகின்றன. புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி சாலையில் இருக்கும் இவ்வூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் திருமயம் மற்றும் பொன்னமராவதிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சாலை வழியே திருப்பத்தூர், இராங்கியம், காரைக்குடி, காரையூர் செல்வது எளிது. இந்த ஊருக்கு மிகவும் அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் நமனசமுத்திரம் மற்றும் திருமயம். சென்னைக்கும் இங்கிருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. இவை பொன்னமராவதியில் இருந்து இவ்வூர் வழியாக இயக்கப்படுகிறது. சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[11]:
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia