பயனர் பேச்சு:VasuVRவாருங்கள், VasuVR! ![]() விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு இப்படி --> விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Terrance \பேச்சு 07:15, 8 செப்டெம்பர் 2008 (UTC) கருநாடக இசைகருநாடக இசையில் தங்கள் ஆர்வத்தைக் கண்டு மெச்சுகிறேன். நீங்கள் அவ்வப்போது வந்து இராகங்கள் பற்றிய கட்டுரைகளை மேம்படுத்துவது கண்டு மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல இராகங்களின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும். தொடர்ந்து பங்களிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 07:57, 9 அக்டோபர் 2008 (UTC)
வாசு, கொமன்சில் உள்ள ஆங்கில படிமத்தை நீங்கள் தான் ஏற்றினீர்கள் என்பதை பின்னரேயே தெரிந்து கொண்டேன். இராகங்களின் படிமங்களைத் தமிழில் தயாரிக்க முடியுமானால் தயவு செய்து தமிழிலேயே படியேற்றுங்கள். உங்கள் பங்களிப்புகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன.--Kanags \பேச்சு 10:07, 16 அக்டோபர் 2008 (UTC) வாசு நீங்கள் ஹேமவதி கட்டுரையில் விசைப்பலகைப் படம் அருமையாக உள்ளது. இதே போல முக்கியமான ராகங்களுக்கேனும் இட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் விசைப்பலகையில் ரி2 முதலான வேறுபாடுகளைக் காட்டுவதும் தேவையாக இருக்கும்.
ஆம், நான் தவறாக ஏனோ எழுதிவிட்டேன். ஹேமவதியில் வரும் காந்தாரமும் க:ரஃகரப்ரியாவில் வரும் 'காந்தாரமும் ஒன்றுதான். ஆனால் ஏனோ அதுதான் க2 என்று குறிக்கப்பட்டுளது என்பதனை நினைவில் கொள்ள மறந்துவிட்டேன். நான் வேங்கடமகியின் முறையை (16 சுரம்) ஏற்றுக்கொள்ளாதவன் (நான் 12 அல்லது 22ஐ ஏற்பவன்) எனவே சங்கராபரணத்தில் வரும் காந்தாரத்தை க3 என்று குறிப்பிடும் வழக்கத்தை சில நேரங்களில் மறந்துவிடுவதுண்டு. விவாதி இராகங்கள் பற்றியும், இராகங்களை மத்திம-பிரதி மத்திம இராகங்கள் என்று பிரிப்பது பற்றியும கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளவன் (மத்திமம்-பிரதி மத்திமம் ஆகிய இரண்டும் வரலாம். மேளகர்த்தா 72 என்பது தவறு என்பவன்). நீங்கள் ஹேமவதி இராகத்தில் இட்டுள்ள படமும், ஏறு-இறங்கு வரிசை அட்டவணையில் குறித்துள்ள சுரங்களும் சரியாகத்தான் உள்ளன. என் குழப்பத்துக்கு மன்னிக்கவும்.--செல்வா 18:56, 21 நவம்பர் 2008 (UTC) நான் தவறுதலாக இரண்டுசுழி னகரத்துடன் மாற்றிவிட்டேன், மன்னிக்கவும். திருத்தியமைக்கு நன்றி. படம் ஒன்றைச் சேர்த்தால் இன்னும் அருமையாக இருக்கும். --செல்வா 15:13, 16 டிசம்பர் 2008 (UTC)
கட்டை பற்றிய ஒரு குறிப்புபேச்சு:மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு என்னும் பக்கத்தில் கட்டை என்னும் சொல்லாட்சி பற்றிய ஒரு குறிப்பை பதிவு செய்துள்ளேன். பார்க்கவும்.--செல்வா 16:33, 21 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்வணக்கம் வாசு: கருநாடக இசை தொடர்பான கட்டுரைகள் விரிவாக்கம் நன்றாக அமைந்து வருகிறது. நேரம் கிடைக்கும் பொழுது அந்த கட்டுரையையும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும். நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
பாராட்டுகள்நீங்கள் கருநாடக இசை பற்றிய கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கிப்பீடியாவுக்கும், ஆங்கிலம் முதலான பிற விக்கிப்பீடியாக்களுக்கும் தரும் ஆக்கங்களைப் பாராட்டுகிறேன். நானும் தமிழிசை, வட்டப்பாலை, சதுரப்பாலை, தமிழிசையில் இருந்த கிரகபேதம், உள்ளிசை என்னும் கமகம், தேவாரப் பண்ணிசை, சங்கீத ரத்னாகரம், ராமாமாத்தியாவின் தேசி இசை, பரத முனிவரின் நூலில் உள்ள ஜாதி, மார்க இசைகள், கமகம், தனி ஆவர்த்தனம், வயலின், வீணை, பல்வேறு மத்தள கொட்டு முழக்கிசைகள் பற்றியெல்லாம், இசை பற்றிய குறிப்புகள் உள்ள கல்வெட்டுகள் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கின்றேன், என்று நிறைவேறுமோ?! நீங்கள் இசை பற்றி எழுதுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது.--செல்வா 16:12, 24 டிசம்பர் 2008 (UTC)
இராகம் பக்கம்வாசு நீங்கள் நீக்கியிருந்த வெளியிணைப்பை மீண்டும் சேர்த்திருக்கின்றேன். அது தமிழில் உள்ள பயனுடைய வெளி இணைப்பு. அவர் ('சீவா) இசை பற்றிய துறைகளில் இங்கு விக்கியில் பங்களித்தவர் மட்டுமல்லாமல் பதிவுலகிலும் பங்களிக்கிறார். நீங்கள் அந்த வெளியிணைப்பை நீக்கியதற்குக் காரணம் ஏதும் தராததால், ஏன் நீக்கினீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. அதனை நீங்கள் 'சீவா அவர் தன்பக்கத்து விளம்பரமாக தந்திருக்கலாம் என நினைத்திருக்கலாமோ என்று எண்ணுகிறேன். பயனுடைய வெளியிணைப்பு என்பதாலேயே மீண்டும் இணைத்துள்ளேன். தவறாக அருள்கூர்ந்து நினைக்க வேண்டாம். நன்றி.--செல்வா 15:03, 6 ஜனவரி 2009 (UTC)
மிக்க நன்றி வாசு. தட்டச்சுப் பிழையெனில் திருத்திக்கொள்ளலாம். பலர் காபி (kaabi) , ஓபன் (Open)என்று எழுதுகிறார்கள் (இவற்றை காப்பி, ஓப்பனென்று எழுதுதல் வேண்டும்). பிரச்சாரம் என்பதை ப்ரசாரம் என்று எழுதுவதைப் பார்த்திருக்கின்றேன் (ப்ரச்சாரம் என்றாவது இருக்க வேண்டும், முதல் எழுத்து மெய்யெழுத்தாக இருப்பது தவறு என்பதை விலக்கிப் பார்த்தாலும்). அதனால்தான் எழுதினேன். தட்டச்சுப் பிழையை நானும் நிறைய விடுபவன்தான். பார்க்கும் பொழுதெல்லாம் நான் விட்ட பிழையைத் திருத்திக்கொண்டேதான் வருகிறேன். வலைப்பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்து நல்லதே, என்றாலும் இன்றைய சூழலில், கெடுதியைவிட அவை நன்மையைச் செய்வதாகவே நினைக்கின்றேன். உங்கள் கருத்துகளைத் தயங்காமல் கூறுங்கள். இராகம் தானம் பல்லவி பக்கத்தில் இணைப்பு தருவது சரியாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது சரியே. --செல்வா 18:09, 7 ஜனவரி 2009 (UTC)
* இது ஒரு பொது பேச்சு அறை போல் அமைந்து விடுமோ? * (ந்கைச்சுவையாகத்தான் கூறுகிறேன்) வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:48, 8 ஜனவரி 2009 (UTC) இசைத் தமிழ்
2010 செயற்திட்டம்வணக்கம் வாசு: நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களை இங்கு காண முடிகிறது. மகிழ்ச்சி.
2010 செயற்திட்டம் தொடர்பான கருத்துக்களை மேலே உள்ள இணைப்பில் பதியலாம். நன்றி. --Natkeeran 03:14, 19 டிசம்பர் 2009 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:47, 18 பெப்ரவரி 2010 (UTC) மீண்டும் வருகநீண்ட நாட்களுக்குப் பின்பு நீங்கள் மீண்டும் தமிழ் விக்கியில் பங்களிப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி. --சிவக்குமார் \பேச்சு 09:02, 1 திசம்பர் 2011 (UTC)
பதக்கம்
கருநாடக இசைவணக்கம் வாசு, கருநாடக இசை கட்டுரையில் கண்னன்கார்த்திக் என்பவர் எழுதியவை அனைத்தும் கூகுள் தானியங்கி மொழிபெயர்ப்பியினால் தானியங்கியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளவை. தானியங்கி மொழிபெயர்ப்புகள் தமிழ்விக்கியில் ஊக்குவிக்கப்படுவதில்லை. அவர் எழுதிய பகுதியை நீங்கள் திருத்தியமைப்பீர்கள் என்றால் அவற்றை நீங்களே மீள்விக்கலாம் அல்லது கூறுங்கள் நானே மீள்வித்துத் தருகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:06, 12 சனவரி 2012 (UTC)
சிறு மாற்றங்கள்பகுப்பு இன்னும் பிற சிறிய மாற்றங்களை 'சுருக்கம்' பெட்டிக்கு கீழே இருக்கும் 'இது ஒரு சிறு தொகுப்பு' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன். இது அண்மைய மாற்றங்களில் பெரிய மாற்றங்களையும் பின்னுக்கு தள்ளுவதை தவிர்க்கும். நன்றி -- மாகிர் 15:29, 13 சனவரி 2012 (UTC)
நன்றி வாசு, புதிய பகுப்பு, கட்டுரைகளில் 'இது ஒரு சிறு தொகுப்பு' கிடையாது என்பதை அறிக. -- மாகிர் 03:38, 14 சனவரி 2012 (UTC) Hotcat கருவிவாசு, பகுப்புகளை கட்டுரைகளில் இணைக்கவும் நீக்கவும் இலகுவாக்க Hotcat என்ற கருவி உள்ளது. இக்கருவியை இணைக்க உங்கள் விருப்பத் தேர்வுகளில் கருவிகள் என்ற பகுதியில் "ஹாட்கேட், எளிதாக ஒரு பக்கத்தில் பகுப்புகளைச் சேர்க்க / நீக்க / மாற்ற உதவும் ஒரு கருவியாகும்" என்பதைத் தேர்ந்தெடுத்து சேமியுங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:24, 15 சனவரி 2012 (UTC)
நன்றிகள்!'சங்கீத கலாநிதி விருது' எனும் கட்டுரையில் விரிவாக்கப் பணிகளை செய்து எனக்கு உதவியமைக்கு மிக்க நன்றி! உங்களின் உதவி தொடர்ந்து தேவை. --Selvasivagurunathan m 19:20, 30 சனவரி 2012 (UTC)
கருநாடக இசைக் கலைஞர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் விரிவாக்கத்தை, முழு வீச்சில் செய்து முடித்த உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுகின்றன!--Selvasivagurunathan m 07:28, 6 பெப்ரவரி 2012 (UTC) பறவைகள் படிமங்கள்அருமையான புகைப்படங்களை (வேடந்தாங்கல்-கட்டுரை) சேர்த்துள்ளீர். பணி மேலும் தொடரட்டும்.--பரிதிமதி 16:08, 4 பெப்ரவரி 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வாசு பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி --இரவி 11:57, 3 சனவரி 2012 (UTC)
வேண்டுகோளை ஏற்று உங்கள் அறிமுகத்தை இட்டதற்கு மகிழ்கிறேன். நீங்கள் விரும்பக்கூடிய வகையில் உரை திருத்தியதில் நிறைவே :) --இரவி 16:33, 7 பெப்ரவரி 2012 (UTC) மேற்கோள்/உசாத்துணை இல்லா கட்டுரைகள்வாசு, நீங்கள் எழுதிவரும் இசை தொடர்பான கட்டுரைகளில் தயவுகூர்ந்து மேற்கோள்களை சேர்க்கவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் பின்னாளில் நீக்கப்படக்கூடும் என்பதை அறிவீர்கள்தானே. விக்கியில் கட்டுரைகளை சரிபார்ப்பதற்கு மேற்கோள்கள் அவசியம் என்பதை அறியவும். நன்றி -- மாகிர் 10:20, 9 பெப்ரவரி 2012 (UTC)
//மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் பின்னாளில் நீக்கப்படக்கூடும் என்பதை அறிவீர்கள்தானே.// தமிழ்ச் சூழலில் பலவற்றுக்கும் மேற்கோள் தருவதில் சிக்கல் உள்ளது. எனவே, மேற்கோள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. எனினும், மேற்கோள் தருவதன் மூலம் கட்டுரைகளின் நம்பகத்தன்மையைக் கூட்டலாம்--இரவி 11:34, 9 பெப்ரவரி 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம்வாசு, உங்கள் முதற்பக்க அறிமுகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அளித்துவரும் பங்களிப்புகள் பயனுடையவை. உங்கள் பணிகள் தொடர நல்வாழ்த்துகள்! எனக்கும் இசையில் மிகுந்த ஆர்வம் உண்டு. பற்பல நூல்களும் செய்திகளும் இருந்தாலும், இசை இலக்கணங்கள், வரலாறு முதலியவை பற்றி அறிந்திருந்தாலும் உங்களுடன் சேர்ந்து ஆக்கம் தர இயலாமலேயே இருந்து வருகின்றது. வருங்காலத்தில் இயன்றளவு உதவுவேன். மேலே நண்பர்கள் சொன்னவாறு மேற்கோள்கள் தருவது நல்ல வழிமுறை. என்னிடம் உள்ள தரவுகளில் இருந்தும் மேற்கோள்கள் சேர்க்கவும் உதவுவேன். தமிழர்களின் இலக்கணமும், நுணுக்கமும் நிறைந்த இசை மரபு, குறிப்பாக முறைமை சார்ந்தது, உலகிலேயே மிகத் தொன்மையானது (இது உண்மையான புகழ்!). --செல்வா 20:43, 13 பெப்ரவரி 2012 (UTC)
உதவி தேவை!கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில்... இறுதியாகப் பாடப்படும் 'மங்களம்' பாடலின் text தந்து உதவவும். முடிந்தால் அர்த்தமும்! நான் எழுதிய 'மங்களம் பாடுதல்' எனும் கட்டுரையின் விரிவாக்கத்திற்கு இது தேவைப்படுகிறது. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 13:02, 27 பெப்ரவரி 2012 (UTC)
ஊடகப்போட்டிநீண்ட நாட்களுக்கு பிறகு உங்களைத்தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சி. உங்கள் பணியடர்வுகளுக்கும் இடையில், ஊடகப்போட்டியில் உங்கள் இசைக்குறித்த படங்களைக் கண்ட போது மகிழ்ந்தேன்.{{TamilWiki Media Contest}}வார்ப்புருவை உரிய இடத்தில் இடுதலை, உங்கள் பதிவிலிருந்தே கற்றேன். அதற்கு முன் வர்ணனைப் பகுதியில் இட்டேன்.அவைகளையும் மாற்ற வேண்டும். நன்றி.இங்குள்ள படம், இசைக்குறித்து இருப்பதால், உங்களுக்கு பயன்படலாம். இதுவும் ஒரு வகை கட இசைக்கருவியோ?பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
முகவீணைபடம் பற்றிய ஐயம்இப்படம் ஷெனாய்.ஷெனாய் என்பதும் முகவீணை என்பதும் ஒன்றா? வேறுபட்ட சொல் பயனாக்கம் உள்ளது. எனவே, எது சரி? மயக்கமுள்ளது.உங்கள் கருத்தினை, பேச்சு:முகவீணை என்பதில் இடவும்.--த♥ உழவன் +உரை.. 06:22, 26 சூலை 2012 (UTC) உங்களுக்குத் தெரியுமா?
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:53, 24 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்புவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
விக்கித்திட்டம் 100 அழைப்புவணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி.--இரவி (பேச்சு) 16:19, 11 சனவரி 2015 (UTC) விக்கிக்கோப்பை 2017![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 22:55, 31 திசம்பர் 2016 (UTC) 2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
|
Portal di Ensiklopedia Dunia