பலேடியம்(II) சல்பேட்டு (Palladium(II) sulfate) என்பது PdSO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். செம்பழுப்பு நிறத்தில் நீருறிஞ்சும் திண்மமாக காணப்படும் இச்சேர்மம் ஓர் இருநீரேற்றாக உருவாகிறது.[1]
தயாரிப்பு
நைட்ரிக் அமிலமும்கந்தக அமிலமும் கலந்த கலவையுடன் பலேடியம் உலோகத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் பல்லேடியம்(II) சல்பேட்டு உற்பத்தியாகிறது. இருமெத்தில்பார்மமைடில் கரைக்கப்பட்ட பலேடியம்(II) சல்பைடுடன் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரிக்க முடியும்.[1][3][4][5]
வினைகள்
நீரற்ற பலேடியம்(II) சல்பேட்டு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் போது, அது பச்சை கலந்த பழுப்பு நிற இருநீரேற்றாக உருவாகிறது. 202 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு இருநீரேற்றை சூடாக்குவதன் மூலம் மீண்டும் நீரற்ற பல்லேடியம்(II) சல்பேட்டு வடிவத்தை உருவாக்க முடியும்.[1][6][4][7]
↑Turki Alkathiri; Kai Xu; Bao Yue Zhang; Muhammad Waqas Khan; Azmira Jannat; Nitu Syed; Ahmed F. M. Almutairi; Nam Ha et al. (2022). "2D Palladium Sulphate for Visible-Light-Driven Optoelectronic Reversible Gas Sensing at Room Temperature" (in en). Small Science2 (3). doi:10.1002/smsc.202100097.
↑ 4.04.1R. Eskenazi; J. Raskovan; R. Levitus (1966). "Sulphato complexes of palladium (II)" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry28 (2): 521–526. doi:10.1016/0022-1902(66)80333-0.
↑W. Manchot; A. Waldmüller (1926). "Zur Kenntnis der Metall-Nitroso-Verbindungen: Über Stickoxyd-Verbindungen des Palladiums" (in de). Berichte der Deutschen Chemischen Gesellschaft59 (9): 2363–2366. doi:10.1002/cber.19260590931.