பலேடியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள சேர்மத்தின் நீரிய கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தும் போது பலேடியம்(II) சல்பைடு உருவாகிறது.:[2]
Pd2+ + H2S → PdS + 2H+
1813 ஆம் ஆண்டில் வேதியியலாளர் பெர்சிலியசு பலேடியத்தை நேரடியாக கந்தகத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தும் இதை தயாரித்தார்.[4]
Pd + S → PdS
கட்டமைப்பு
பலேடியம்(II) சல்பைடின் படிகக் கட்டமைப்பானது தோராயமாக சதுரத்தள பலேடியம் மையங்களும் நான்முகி கந்தக மையங்களும் கொண்டதாக படிகமாகிறது.[1]
வினைகள்
மிகையளவு கந்தகத்துடன் பலேடியம்(II) சல்பைடு சேர்க்கப்பட்டு சூடுபடுத்தப்பட்டால் பலேடியம் இரு சல்பைடு உருவாகிறது:[2]
PdS + S → PdS2
தொடர்புடைய சேர்மங்கள்
Pd-S பிணைப்பு கொண்ட Pd4S, Pd2.8S, Pd2.2S,PdS2 போன்ற வேறு பல சேர்மங்களும் அறியப்படுகின்றன. பிராக்கைட்டு என்ற கனிமம் (Pt, Pd, Ni)S என்ற தனிம இயைபை கொண்டு PdS உடன் உருவொத்த சேர்மமாக உள்ளது.[3]