சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு
சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு (Sodium tetrachloropalladate) என்பது Na2PdCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தொடர்புடைய கார உலோகக் குளோரைடின் நீரிய கரைசலுடன் பலேடியம்(II) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு உப்பையும் இதையொத்த M2PdCl4 கார உலோக உப்புகளையும் தயாரிக்கலாம்[1]. பலேடியம்(II) குளோரைடு நீரில் கரையாது ஆனால் சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு நீரில் கரையும். நீரிலிருந்து இச்சேர்மம் முந்நீரேற்றாக படிகமாகிறது. செம்பழுப்பு நிறமாகக் காணப்படும் இந்நீரேற்றின் மூலக்கூற்று வாய்ப்பாடு Na2PdCl4 • 3H2O ஆகும். மேலும் இதன் மோலார் நிறை 348.22 ஆகும். வர்த்தகமுறையில் கிடைக்கக் கூடிய சோடியம் டெட்ராகுளோரோபலேடேட்டு உப்பு இதுவேயாகும்[2]. பாசுபீன்களுடன் இது மேலும் வினைபுரிந்து பலேடியத்தின் பாசுபீன் அணைவுச் சேர்மத்தைக் கொடுக்கிறது. பலேடியம்(II) குளோரைடின் ஒருங்கிணைவுப் பலபடியை சிதைத்து வினைத்திறன் மிக்க ஒற்றைப்படி அசிட்டோநைட்ரைல் அல்லது பென்சோநைட்ரைல் அணைவுச்சேர்மங்களாக்கி[3] தொடர்ந்து பாசுபீன்களுடன் வினைபுரியச் செய்வதால் மாற்று வழிமுறையில் பாசுபீன் அணைவுச் சேர்மங்களை உருவாக்கலாம்[1]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia