பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான்
பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban Pakistan, the TTP) (உருது: تحریک طالبان پاکستان; பாக்கித்தானின் மாணவர் இயக்கம்), பரவலாக பாக்கித்தானிய தாலிபான், என்பது பாக்கித்தானின் ஆப்கானித்தானின் எல்லையோரமாக அமைந்துள்ள பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் இயங்கும் பழமைவாத இசுலாமியக் கொள்கைகளை உடைய பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் குடை அமைப்பாகும்.[2] திசம்பர் 2007இல் ஏறத்தாழ 13 குழுக்கள் பைதுல்லா மெகசூத்தின் தலைமையில் ஒன்றுபட்டு பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபானை உருவாக்கினர்.[1][3] இந்த இயக்கத்தின் குறிக்கோள்களில் பாக்கித்தானிய அரசாண்மைக்கு எதிர்ப்பு, இசுலாமியச் சட்ட முறைமையை அவர்களது புரிதலின்படி கட்டாயமாகச் செயல்படுத்துவது மற்றும் ஆப்கானித்தானில் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு படைகளுடனானப் போருக்குத் துணை புரிதல் முதன்மையாக உள்ளன.[1][3][4] பாக்கித்தானிய தாலிபான்கள் ஆப்கானித்தானிய தாலிபான்களுடன் நேரடியாக இணைந்திருக்கவில்லை. இரண்டுமே தங்களது வரலாறு, நோக்கங்கள் மற்றும் விருப்பங்களில் நிறைய வேறுபட்டுள்ளன. இருப்பினும் இசுலாமிய முறைமைகளைக் குறித்தான புரிதல்களில் ஒன்றுபடுகின்றனர். மேலும் இரு இயக்கங்களிலும் பெரும்பான்மையோர் பசுதூனியர்கள் ஆவர்.[4][5] பாக்கித்தான் அரசின் ஆதரவுடன் பன்னாட்டு படைகளுடனும் ஆப்கானியப் படைகளுடனும் போர் புரிவதாக நம்பப்படும் ஆப்கானிய தாலிபான் பாக்கித்தானைத் தாக்குவதில்லை என முடிவாக உள்ளது.[5] ஆனால் பாக்கித்தானிய தாலிபானோ பாக்கித்தானிய அரசுக்கு எதிராகப் போராடுகிறது. தாக்குதல்கள்
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia