பாசமுள்ள பாண்டியரே
பாசமுள்ள பாண்டியரே (Pasamulla Pandiyare) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான தமிழ், அதிரடி நாடகத் திரைப்படமாகும். கல்யாணி முருகன் தயாரித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார். இப்படத்தில் ராஜ்கிரண், மீனா, ரோஜா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். எம். என். நம்பியார், நிழல்கள் ரவி, அலெக்ஸ், சங்கிலி முருகன், வடிவேலு, செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[1] இது 1997 சூன் 6 அன்று வெளியானது.[2] கதைக்களம்பாண்டியர் நேசமணியின் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர். குடும்பம் பாண்டியர் வசம் வீட்டையும், ஈஸ்வரமூர்த்தி வசம் பிற சொத்துக்களையும் விட்டுவிட்டு, மலேசியாவுக்கு குடிபெயர்கிறது. திறமையான குறிசொல்லியான வெள்ளையம்மா பாண்டியரை விரும்பிகிறாள். நேசமணியின் மகள் தனலட்சுமி தன் கணவர் நாகராஜா மற்றும் மகள் ரேவதியுடன் இந்தியா திரும்புகிறார். ரேவதி பாண்டியர் மீது காதல் கொள்கிறாள். வெள்ளையம்மா தனலட்சுமியின் கைரேகையைப் பார்த்து அவளது சொல்லப்படாத ரகசியக் கதையைக் கண்டுபிடிக்கிறாள். பின்னர், நாகராஜாவும் ஈஸ்வரமூர்த்தியும் சேர்ந்து வெள்ளையம்மாவைக் கொல்கின்றனர். வெள்ளையம்மா கொலைப் பழிக்காக அப்பாவி பாண்டியர் கைது செய்யப்படுகிறார். பாண்டியர் தன் மீதான கொலைக் குற்றச்சாட்டிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே மீதிக் கதையாகும். நடிகர்கள்
தயாரிப்புஎன் ராசாவின் மனசிலே படத்திற்குப் பிறகு மீனாவுடன் ராஜ்கிரண் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் ஜோடி சேர்ந்தார். [3] பாடல்கள்இப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[4]
வரவேற்புஇடைவேளை வரை கதையே நகராம் இருப்பது சிரமமாக உள்ளது என்று கல்கியின் ஜி கூறுகிறினார். அதன் பின்னர் நகரும் கதைக்களமும் சிரமப்படுத்துகிறது என்றார். ஆனால் அவர் பாத்திமா பாபுவின் நடிப்பைப் பாராட்டினார். ஆனால் பாத்திமாவின் ஒப்பனையை விமர்சித்தார். தேவாவின் இசையில் பெரிதாக ஏதுவும் இல்லை என்று கூறினார். கஜேந்திரன் படத்தில் குறைந்தது நான்கு சிறப்பு அம்சங்களையாவது தந்திருக்கலாம் என்று கூறி அவர் விமர்சனத்தை முடித்தார். [5] அடுத்தடுத்து வெளியான ராஜ்கிரணின் படங்கள் பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் கஜேந்திரன் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. மேலும், தனக்காக ஒரு சாதாரண கதையைத் தேர்ந்தெடுத்து அவர் தவறு செய்தார்.[3][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia