பாண்டவர் இல்லம்
பாண்டவர் இல்லம் என்பது சன் தொலைக்காட்சியில் சூலை 15, 2019 முதல் ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் பாப்ரி கோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ் மற்றும் குகன் சண்முகம் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 28 அக்டோபர் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 1216 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. கதைசுச்ருக்கம்பரம்பரை பாரம்பரியத்தை பின் பற்றி வாழும் இரு குடும்பங்களின் கதை. பாண்டவர் இல்லம் முதலாவது பாரம்பரிய குடும்பம் மற்றும் ரெண்டாவது பாரம்பரிய குடும்பம் ஜமீன் குடும்பம். பாண்டவர் குடும்பத்தின் பெரிய சுந்தரத்துக்கு ம் மற்றும் ஜமீன் குடும்பத்தின் வேதநாயகி க்கும் திருமணம் நடக்கின்றது. சில காரணங்ககளால் சுந்தரம் இறக்க, வேதநாயகி பாண்டவர் இல்லத்திற்கு எதிராக வில்லியாக மாறி பாண்டவர் குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறாங்க. பாண்டவர் குடும்பத்தில் வேதநாயகி வாழாமல் போனதில் இருந்து, அந்த குடும்பத்துக்கு பெண்களே வேண்டாம் என்று ஐந்து வளர்ந்த பேரப் பிள்ளைகளுடன் தாத்தா வாழ்ந்து வருகிறார். இதை அறிந்த மல்லிகா பாண்டவர் இல்லத்தின் நான்காவது பேரன் அழகு சுந்தரத்தை துரத்தி துரத்தி காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்கின்றார், திருமணத்திற்கு பிறகு வேதநாயகியிடமிருந்து பாண்டவர் இல்லத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த தொடரின் கதை. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
கயல் குடும்பத்தினர்
ஆர்த்தி குடும்பத்தினர்
துணைக்கதாபாத்திரங்கள்
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மறு ஆக்கம்
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia