எதிர்நீச்சல் (தொலைக்காட்சித் தொடர்)
எதிர்நீச்சல் என்பது 2022 ஆம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சிறந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் திருசெல்வம் தியேட்டர்ஸ் சார்பில் திருச்செல்வம்[1] என்பவர் தயாரிப்பு, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.[2][3][4] இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது. இதில் மதுமிதா எச், சபரி பிரசாந்த், கனிகா,[5][6][7][8][9][10] பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம்[11][12] மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பெப்ரவரி 7, 2022 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு ஒளிபரப்பாகி, 744 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த மெகாத்தொடர்தான் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக U+R சந்தையில் (நகர்ப்புறம் + கிராமப்புறம்) 9:30 மணியளவில் ஒளிபரப்பாகி, TRP மதிப்பீட்டில் முதல் இடத்தை பிடித்த முதல் தமிழ் தொலைக்காட்சி தொடர் ஆகும். எதிர்நீச்சல் வரலாறு சாதனை புரிந்தது. நடிகர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia