பாதரச(I) சல்பேட்டு
பாதரச(I) சல்பேட் (Mercury(I) sulfate), பொதுவாக மெர்குரஸ் சல்பேட் என அழைக்கப்படுகிறது, இது Hg2 SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும் .[2] பாதரச(I) சல்பேட் என்பது ஒரு உலோக கலவை, இது வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது பழுப்புநிறத்துாள் போன்ற உலோகச் சேர்மம் ஆகும்.[3] இது ஹைட்ரஜன் அணுக்கள் இரண்டையும் பாதரசம்(I) உடன் இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் உருவாகும் கந்தக அமிலத்தின் உலோக உப்பு ஆகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது; சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்டாலோ, உட்கொண்டாலோ அல்லது தோலால் உறிஞ்சப்பட்டாலோ அது மரணத்தை விளைவிக்கும் அளவு ஆபத்தானது. அமைப்புபாதரச(!) சல்பேட்டின் படிக அமைப்பு Hg22+ ஆன இரட்டை மணி வடிவத்தையும் மற்றும் SO42− எதிரயனிகளால் முதன்மை அடிப்படை அலகுகளாலும் ஆனது. Hg22+ இரட்டை மணி நான்கு ஆக்ஸிஜன் அணுக்களில் Hg₋O தூரம் 2.23 முதல் 2.93Å வரையான துாரத்தில் சூழப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Hg-Hg அணுக்களிடை தூரம் சுமார் 2.500Å ஆகும்.[4] பாதரசம் (I) சல்பேட்டு பாதரச அணுக்களை 2.500Å என்ற பிணைப்பு நீளத்துடன் இரட்டைகளாக அமைத்து வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலோக அணு இரட்டையர்கள் ஒரு அலகு கலத்தில் ஒரு அச்சுக்கு இணையாக அமைந்திருக்கும். பாதரச அணு இரட்டைகளானவை எல்லையற்ற சங்கிலியான SO 4 - Hg - Hg - SO 4 - Hg - Hg - என்பதன் பகுதியை உருவாக்குகின்றன. Hg - Hg - O பிணைப்பு கோணமானது 165° ± 1 ஆகும். இந்தச் சங்கிலி அலகு கலத்தை குறுக்காக கடக்கிறது. பாதரச சல்பேட்டின் அமைப்பானது பலவீனமான Hg-O இடைவினைகளால் இணைப்பில் வைக்கப்பட்டுள்ளது. SO4 ஒற்றை எதிரயனியாக செயல்படாது, மாறாக பாதரச உலோகத்துடன் அணைவுப் பிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.[5] தயாரிப்புபாதரசம்(I) சல்பேட்டு தயாரிப்பதற்கான ஒரு வழியானது, பாதரசம் (I) நைட்ரேட்டின் அமிலக் கரைசலை 1 முதல் 6 கந்தக அமிலக் கரைசலுடன் கலப்பது ஆகும்.[6][7]
அடர் கந்தக அமிலத்துடன் அதிகப்படியான பாதரசத்தை வினைபுரியச் செய்வதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்:[6]
மின் வேதியியல் கலங்களில் பயன்பாடுபாதரச(I) சல்பேட் பெரும்பாலும் மின் வேதியியல் கலங்களில் பயன்படுத்தப்படுகிறது.[8][9][10] இது முதன்முதலில் மின்வேதியியல் கலங்களில் லாடிமர் கிளார்க்கால் 1872 இல் அறிமுகப்படுத்தப்பட்டது,[11] பின்னர் 1911 ஆம் ஆண்டில் இது ஜார்ஜ் அகஸ்டஸ் ஹுலெட் தயாரித்த வெஸ்டன் கலங்களில் மாற்றாக பயன்படுத்தப்பட்டது. 100° செல்சியசிற்கு மேல் அதிக வெப்பநிலையில் இது வெள்ளி சல்பேட்டுடன் ஒரு நல்ல மின்முனையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது;[12] பாதரச(I) சல்பேட்டு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிதைவுச் செயல்முறை வெப்பங்கொள் வினையாகும். இது 335 முதல் 500 வரையிலான வெப்பநிலையில் நிகழ்கிறது. பாதரச(I) சல்பேட்டு திட்ட மின்கலங்களைச் சாத்தியப்படுத்தும் அளவிற்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மிகக்குறைவான அளவு கரைதிறனையே (லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவிலேயே) கொண்டிருப்பதாலும், அதாவது எதிர்மின்முனையிலிருந்து பரவுவது அதிகமாக இல்லாமல் இருப்பதாலும், பாதரச மின்முனையில் ஒரு பெரிய ஆற்றலைக் கொடுப்பதற்கு இது போதுமானதாக இருக்கிறது.[13] பாதரச(I) சல்பேட் மின்வாய்கள் குளோரைடு அற்ற மின்கலன்கள் தேவைப்படும் நேர்வில் பயன்படுத்தப்படுகின்றன. இது குறிப்பாக, காரீய-அமில மின்கலங்கள் பயன்படுத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia