பாதரச(II) சல்பேட்டு
பாதரச(II) சல்பேட் (Mercury(II) sulfate), பொதுவாக மெர்குரிக் சல்பேட் என்று அழைக்கப்படுகிறது, இது Hg S O4 என்ற வேதிச் சேர்மம் ஆகும் . இது மணமற்ற திடப்பொருளாகும், இது வெண்ணிறத் துகள்கள் அல்லது படிகத் தூளை உருவாக்குகிறது. நீரில், கந்தக அமிலத்துடன் இது மஞ்சள் நிறமுடையம் மற்றும் கரையாத சல்பேட்டாக வீழ்படிவாகிறது. வரலாறு1932 ஆம் ஆண்டில், ஜப்பானிய இரசாயன நிறுவனமான சிஸ்ஸோ கழகம் அசிட்டிலீன் மற்றும் நீரிலிருந்து அசிடால்டிகைடை உற்பத்தி செய்வதற்கான ஊக்கியாக பாதரச சல்பேட்டைப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்த வினையின் துணை விளைபொருளாக மெத்தில்பாதரசம் உருவாகியது. ஆனால், அந்த நேரத்தில் அது தெரிந்திருக்கவில்லை. ஜப்பானின் மினமாட்டாவில் ஏற்பட்ட மினமாட்டா கொள்ளை நோய்க்கு மினமாட்டா கடல் வளைகுடாவில் கொட்டப்பட்ட மெதில் மெர்குரி உள்ளிட்ட பாதரசக் கழிவு பொருட்களின் வெளிப்பாடு மற்றும் நுகர்வு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.[4] உற்பத்திபாதரச சல்பேட்டு, HgSO4, செறிவூட்டப்பட்ட H2SO4 ஐ தனிம நிலை பாதரசத்துடன் வெப்பப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது:[5]
அல்லது அடர்த்தியான மஞ்சள் பாதரச(II) ஆக்சைடை செறிவூட்டப்பட்ட கந்தக அமிலம் மற்றும் தண்ணீரில் கரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[6] பயன்கள்டெனிகஸின் வினைக்காரணிபாதரச சல்பேட்டின் அமிலக் கரைசலே டெனிகசின் வினைக்காரணி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக 20 ஆம் நூற்றாண்டு முழுவதும் பகுப்பாய்வுக்கான தரமான வினைக்காரணியாக பயன்படுத்தப்பட்டது. மூவிணைய ஆல்ககால்களைக் கொண்ட சேர்மங்களைக் கொண்ட ஒரு கரைசலில் டெனிகஸின் வினைக்காரணி சேர்க்கப்பட்டால், ஒரு மஞ்சள் அல்லது சிவப்பு வீழ்படிவு உருவாகும்.[7] அசிடால்டிகைடின் உற்பத்திமுன்பு குறிப்பிட்டபடி, அசிட்டிலீன் மற்றும் நீரிலிருந்து அசிடால்டிகைடு உற்பத்தி செய்ய வினையூக்கியாக Hg SO4 பயன்படுத்தப்பட்டது.[8] ஆல்கீன்களின் ஆக்ஸிமர்குரேஷன்-டிமர்குரேஷன்பாதரச சல்பேட்டு மற்றும் பாதரச(II) அசிடேட்டு போன்ற பாதரசத்தின் சேர்மங்கள் பொதுவாக ஆக்ஸிமர்குரேஷன்-டிமர்குரேஷனில் வினையூக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது ஒரு வகை எலக்ட்ரான்கவர் சேர்க்கை வினைகள் ஆகும். ஒரு ஆல்கீனின் நீரேற்றமானது ஒரு ஆல்ககாலை விளைவிக்கிறது, இதன் பிறகு பகுதித்தெரிவு நிகழ்கிறது, இந்த பகுதித்தெரிவு மார்கோவ்னிகோவின் விதியால் கணிக்கப்படுகிறது . அல்கைன்களின் நீரேற்றம்வினையின் வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமிலம் சேர்க்கப்படாமல் பாதரச சல்பேட்டின் நீர்க்கரைசலைப் பயன்படுத்தி 2,5-டைமெத்திஎக்சின்-2,5-டியோலை 2,2,5,5-டெட்ராமெதில்-டிராஐதரோஃபியூரானாக மாற்றுகிறது.[9] ![]() சுகாதார பிரச்சினைகள்HgSO4 சுவாசம் மூலம் உட்கொள்ளப்படுவதால் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படலாம்:இதன் காரணமாக மார்பில் இறுக்கம், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் வலி ஆகியவை ஏற்படலாம். கண்களுக்கு HgSO4 இன் வெளிப்பாடு கண் வெளிப்படலம் மற்றும் கருவிழியில் புண்ணை ஏற்படுத்தும். பாதரச சல்பேட் சருமத்தின் மேல் வெளிப்படுத்தப்பட்டால் அது தோலில் உணர்திறன் அழற்சியை ஏற்படுத்தக்கூடும். கடைசியாக, பாதரச சல்பேட்டு உட்கொள்ளப்பட்டால் திசு அழிப்பு, வலி, வாந்தி மற்றும் கடுமையான செயலறுவளி அடைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். உட்கொள்வது புற இரத்த நாளச் சிதைவு காரணமாக சில மணி நேரங்களுக்குள் மரணத்தை ஏற்படுத்தும். இது மருத்துவ காரணங்களுக்காக வாந்தியைத் தூண்ட 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்டது. [1] இச்சேர்மம் மனிதனில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணி அல்ல. பாதுகாப்புபாதரச சல்பேட்டு அதிக அளவில் உட்கொள்ளப்படும் போது மரணம் ஏற்படலாம். மனிதர்கள் பாதரசத்தின் சேர்மங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால், கடுமையான நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். நீருடன் வினைப்படும் போது அரிக்கும் தன்மையுடைய கந்தக அமிலத்தை வெளியிடக்கூடியது. இந்த உப்பு அல்லது இதன் கரைசல் மற்ற உலோகங்களான அலுமினியம், இரும்பு, தாமிரம், காரீயம், மக்னீசியம், துத்தநாகம் போன்றவற்றை அரிக்கும் தன்மை கொண்டது. குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia