காட்மியம் சல்பேட்டு(Cadmium sulfate) என்பது CdSO4.xH2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியியல்சேர்மமாகும். பரவலாக CdSO4.H2O, என்ற நீரேற்று வடிவம் காணப்பட்டாலும், CdSO4.8/3H2O என்ற நீரேற்று வடிவம் மற்றும் நீரிலியான (CdSO4) ஆகிய மேலும் இரண்டு வடிவங்களில் காட்மியம் சல்பேட்டு காணப்படுகிறது. அனைத்து சல்பேட்டுகளும் நிறமற்றனவாகவும் நீரில் கரையக்கூடியனவாகவும் உள்ளன.
காட்மியம் சல்பேட்டின் நீரிலி வடிவத்தை சோடியம் பெர்சல்பேட்டை காட்மியத்துடன் சேர்த்து தயாரிக்கலாம்
Cd + Na2S2O8 → CdSO4 + Na2SO4
இயற்கையில் காட்மியம் சல்பேட்டு நான்கு நீரேற்று வடிவமான உடுரோப்சைட்டு (CdSO4•4H2O) மற்றும் அடிப்படை உப்பாக நையிடர்மேரைட்டு கனிமம் (Cu4Cd(SO4)2(OH)6•4H2O). ஆகியவற்றில் காணப்படுகிறது.
பயன்கள்
மின்சுற்றுகளில் மின்முலாம் பூச்சாக காட்மியம் சல்பேட்டு பயன்படுகிறது. காட்மியம் சல்பைடு போன்ற காட்மியம் சார்ந்த நிறமிகள் தயாரிப்புக்கு முன்னோடியாக விளங்குகிறது. மேலும் இச்சேர்மம் ஒளிரும் திரைகளில் நிறமியாகவும் வெசுட்டன் செந்தர மின்கலன்களில் மின்பகுளியாகப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
↑Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. ISBN0-8493-0487-3.