பாரதிய வித்தியா பவன்
பாரதிய வித்தியா பவன் (Bharatiya Vidya Bhavan) பிரித்தானிய இந்திய அரசில் இந்தியர்களால் நிறுவப்பட்ட பெரும் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை, மகாத்மா காந்தியின் ஆதரவுடன்[1], இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், கல்வியாளருமான குலபதி கே. எம். முன்ஷியால்[2] 7 நவம்பர் 1938ல் நிறுவப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. தற்போது பாரதிய வித்தியா பவனின் செயற்திட்டங்கள் இந்தியா முழுவதும் 119 மையங்களில் நடத்தப்படுகிறது. மேலும் வெளிநாட்டில் 7 மையங்கள் செய்ல்படுகிறது.[3] [4] இந்நிறுவனம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் இந்து தொன்மவியல் போன்ற நூல்கள் மற்றும் இதழ்கள் வெளியிட்டு வருகிறது. அமைப்புபாரதிய வித்தியா பவன் அறக்கட்டளை நிறுவனம் இந்தியாவின் பல மாநிலங்களில் நூற்றிற்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும், மேனிலைப்பள்ளிகளும், கல்லூரிகளும் நடத்துகிறது.[5] வல்லபாய் படேல், தலாய் லாமா, ஜவகர்லால் நேரு, அன்னை தெரசா, ஜெ. ர. தா. டாட்டா ஆகியோர் பாரதிய வித்தியா பவனின் புகழ் பெற்ற முன்னாள் கௌரவ உறுப்பினர்கள் ஆவார். சிறப்பு2002ம் ஆண்டில் பாரதிய வித்தியாபவன் நிறுவனம் காந்தி அமைதிப் பரிசு பெற்றுள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia