பிஜோயா சக்ரவர்த்தி
பிஜோயா சக்ரவர்த்தி (Bijoya Chakravarty) (பிறப்பு: அக்டோபர் 7, 1939), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2][3][4] பின்னணிபிஜோயா தனது அரசியல் வாழ்க்கையை ஜனதா கட்சியில் தொடங்கினார். பின்னர் இவர் பிராந்திய அசாம் கண பரிசத் கட்சியில் சேர்ந்தார். 1986 முதல் 1992 வரை மாநிலங்களவையில் பணியாற்றிய பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 13வது மக்களவையில் குவகாத்தி தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1999ஆம் ஆண்டில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இந்தத் தொகுதியில் வென்றார். வாஜ்பாய் அரசின் முதல் பதவி காலத்தில், மத்திய நீர்வளத் துறை அமைச்சராக பணியாற்றினார். 2004ஆம் ஆண்டில், பாஜக இவரது இடத்தில் பாடகர் பூபன் ஹசாரிகாரை களமிறக்க முடிவு செய்தது. இது பாரதிய ஜனதா கட்சி ஊழியர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் ஹசாரிகா தோல்வியடைந்தார். பாரதிய ஜனதா கட்சி தனது தவறைப் புரிந்து கொண்டு, 2009 மக்களவைத் தேர்தலில் பிஜோயாவை குவுகாத்தி தொகுதியில் இருந்து மீண்டும் பரிந்துரைத்தது. இதன் விளைவாக, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாஜகவை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் வென்றார். தனிப்பட்ட வாழ்க்கைபிஜோயா, பி.கே. தாகூர்-முகியாதா தாகூர் தம்பதியினருக்கு 1939 அக்டோபர் 7 அன்று அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தின் பாலிகான் கிராமத்தில் பிறந்தார்.[1] குவகாத்தி பல்கலைக்கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1] இவர் ஜிதன் சக்ரவர்த்தி என்பவரை ஜூன் 1, 1965 இல் மணந்தார்.[1] இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகள் சுமன் ஹரிப்ரியா 2016ஆம் ஆண்டு அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஹஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] இறப்புபிஜோயா சக்ரவர்த்தி, மே 2017 இல் தனது 49 வயதில் இறந்தார்.[7] வகித்த பதவிகள்
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia