அசாம் மாகாணம்
அசாம் மாகாணம் (Assam Province) பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தை 1912-இல் பிரித்ததன் மூலம் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் தலைநகரம் சில்லாங் ஆகும். முதன்முதலில் 1874-இல் வங்காள மாகாணத்திலிருந்து, அசாம் பகுதிகளை, பிரித்து வடகிழக்கு எல்லைப்புற முகமை பிரதேசம் நிறுவப்பட்டது. பின்னர் 1905-இல் வங்காளப் பிரிவினையின் போது, இம்முகமையை கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1912-இல் மீண்டும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. வரலாறு1824 - 1826-இல் நடைபெற்ற முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், பிரித்தானிய இந்தியப் படைகள், பர்மிய இராச்சியம் கைப்பற்றிருந்த வடகிழக்கு இந்தியப் பகுதிகளை கைப்பற்றி பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.[1] 1826 முதல் 1832 முடிய அசாம் பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இருந்தது. மேல் அசாம் பகுதிகளை சுதேசி சமஸ்தான மன்னர்கள் ஆண்டனர். ஆனால் கீழ் அசாம் பகுதிகளை பிரித்தானியர்கள் ஆண்டனர். 16 அக்டோபர் 1905-இல் அசாம் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் கீழ் சென்றது. 1 ஏப்ரல் 1912-இல் மீண்டும் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளை ஒன்றிணைத்து வங்காள மாகாணம் மீண்டும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் மற்றும் அசாம் மாகாணம் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு மார்ச்-சூலையில் பர்மாவைக் கைப்பற்றிய ஜப்பானியப் படைகள் அசாம் மாகாணம் மற்றும் மணிப்பூர் இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, ஜப்பான் கைப்பற்றிய பிரித்தானிய இந்தியப் பகுதிகள் மீண்டும் அசாம் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அசாம் மாகாணம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[2] 1972-இல் அசாம் மாகாணத்தை ஏழு மாநிலங்களாகப் பிரித்தனர். இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia