பித்யாதாரி ஆறுபித்யாதாரி ஆறு (Bidyadhari River) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பாயும் ஒரு நதியாகும். பித்யா என்ற பெயராலும் இந்த ஆறு அறியப்படுகிறது. நாடியா மாவட்டத்தில் அரிங்காட்டா நகரத்திற்கு அருகில் உருவாகி, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் தேகங்கா, அப்ரா மற்றும் பராசத்து பகுதிகள் வழியாக பாய்ந்து சுந்தரவனத்தில்உள்ள இராய்மங்கல் ஆற்றில் கலக்கிறது. [1] வரலாறுபண்டைய நாகரிகங்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய வழிசெலுத்தல் பாதையை உருவாக்கியுள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகேதுகர் நதி துறைமுகம் இந்த ஆற்றின் கரையில் இருந்தது. நதி வடக்கு 24 பர்கானா மாவட்டத்திற்கும் மற்றும் கொல்கத்தாவிற்கும் முக்கிய வடிகால் அமைப்பாக இருந்து வருகிறது. [1] சுந்தரவனப் பகுதியானது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்வழிகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய கால்வாய்கள் பெரும்பாலும் வடக்கு-தெற்கு திசையில் ஒரு மைல் அகலத்தில் இயங்கும். பித்யாதாரி மற்றும் பிற கால்வாய்கள் இப்போது நன்னீரின் முக்கிய ஆதாரமான கங்கையிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவை சிறிதளவு நன்னீரையே எடுத்துச் செல்கின்றன. வங்காளப் படுகையின் வீழ்ச்சி மற்றும் மேலோட்டமான மேலோடு படிப்படியாக கிழக்கு நோக்கி சாய்ந்ததன் விளைவாக ஊக்ளி-பாகீரதி கால்வாய்கள் பதினேழாம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக கிழக்கு நோக்கி நகர்ந்தன. [2] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia