பிரகலாதா
பிரகலாதா என்பது பி. என். ராவ் இயக்கத்தில் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[1] இது பிரகலாதனின் கதை மற்றும் விஷ்ணுவின் மீதான அவனது பக்தியைக் குறித்ததாக உள்ளது. 1932 ஆண்டு வெளியான தெலுங்கு படமான பக்த பிரகலாதாவுக்கு கிடைத்த வரவேற்ப்புக்குப் பிறகு அதே தொன்மக் கதையைத் தழுவி எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கதை பின்னர் இந்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, அசாமி உள்ளிட்ட பல மொழிகளில் 20 முறை எடுக்கப்பட்டது, அவற்றில் பெரும்பாலானவை வணிக ரீதியில் வெற்றி பெற்றன.[2] இது நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது. விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன், பிரகலாதனின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், எம். ஜி. ஆர் இந்திரன் வேடத்தில் நடித்திருந்தார்.[3] இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்சுமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.[4] கதைஇந்தக் கதையானது வைணவர்களின் புனித நூலான விஷ்ணு புராணத்தில் உள்ள ஒரு சிறு அத்தியாயத்தில் உள்ளது. தந்தை இரணியனின் விருப்பத்துக்கு மாறாக மகன் பரகலாதன் விஷ்ணுவின் மீது பக்தி செலுத்துகிறான். தன் மகனின் போக்கை மாற்ற இரண்யன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன. இறுதியாக, அவர் தன் மகனைக் கொல்ல முடிவு செய்யும்போது. பிரகலாதன் தன் தந்தையிடம் விஷ்ணு தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று கூறுகிறான். தன் கதையால் இரணியன் தூணைத் தாக்கும்போது, விஷ்ணு நரசிம்ம வடிவத்தில் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்டு இரணியனைக் கொல்கிறார். நடிப்பு
தயாரிப்புசேலம் சங்கர் பிலிம்சு மற்றும் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோசு ஆகிய இருநிறுவனங்களும் இப்படத்தை தயாரித்தன.[2] இந்தத் திரைப்படத்தின் கதை, வசனம் மலையாள பாதிப்பை ஒட்டி எழுதப்பட்டது. இந்தப் படத்தின் மலையாளப் பாதிப்பிற்கு கதை வசனத்தை என். பி. செல்லப்பன் நாயர் எழுதினார்.[1] இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.[1] மறு-ஆக்கங்கள்முதலில் தெலுங்கு மொழியில் 'பக்த பிரகலாதா' என்ற பெயரில் 1939 யில் வெளியானது. பின்னர், 1942-யில் அதேபெயருடன் மறுஆக்கம் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, வங்காளம், அசாமிய மொழி, இந்தி மற்றும் பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட முறை இப்படம் மறுஆக்கம் செய்யப்பட்டு பெரும்பாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது.[2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia